உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 4 என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் இந்த நிகழ்ச்சி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சியாக மாறிவிட்டது என்று தான் கூற வேண்டும்.
மேலும் இந்த பிக் பாஸ் சீசன்4 என்ற நிகழ்ச்சி தற்போது 80 நாட்களை கடந்து இறுதிப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றி புதிதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த தகவல் என்னவென்றால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல நடிகர் ஒருவர் நுழைய உள்ளாராம் அந்த நடிகர் யார் என்று கேட்டால் ஜெயம் ரவி தான் இவர் நடித்திருந்த பூமி திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளதால் படத்தின் பிரமோஷனுக்காக நடிகர் ஜெயம் ரவி பிக் பாஸ் வீட்டிற்குள் செல்கிறார்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் ஜெயம் ரவி கலந்த வீடியோ கிளிப் ஒன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
இதோ அந்த வீடியோ கிளிப்.