Lady super star Nayanthara and Vignesh sivan video: லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பதை அனைவரும் அறிந்ததே. இவர் 2015 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடி தான் என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படத்தின் பின் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் காதல் மலர்ந்தது.
இவர்கள் இருவரும் லிவிங் டுகெதரில் உள்ளனர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இவர்கள் இருவரும் சேர்ந்து கோவில், சூட்டிங், டேட்டிங், பார்ட்டி என போகும்போது தாங்கள் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
தற்போது கொரோனாவால் வீட்டிலேயே முடங்கி உள்ள நடிகர், நடிகைகள் தங்களது புகைப்படம் மற்றும் வீடியோவை பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் தற்போது விக்னேஷ் சிவன் அவர்கள் நானும் ரவுடி தான் சூட்டிங்கில் அவரும் நயன்தாராவும் கடற்கரையில் இணைந்து எடுத்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் காட்டுத்தீ போல பரவி வைரலாகி கொண்டிருக்கிறது.
இதோ அந்த வீடியோ.
#Nayanthara #actress pic.twitter.com/g4sekeM0dz
— Tamil360Newz (@tamil360newz) April 27, 2020