தவறு செய்த ரவுடிகளை கொடூரமாக தாக்கிய ஹரால்டு தாஸ்.. வெளியானது லியோ படத்தில் அர்ஜுனின் கிளிம்ஸ் வீடியோ

leo arjun
leo arjun

Leo Harold Das: விஜய்யின் லியோ படத்தில் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு லியோ படக் குழு கிளிம்ஸ் வீடியோவை  வெளியிட்டு இருக்கும் நிலையில் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இன்று அர்ஜுனின் பிறந்தநாள் என்பதால் லியோ படக்குழு  மாலை 5 மணி அளவில் அர்ஜுனின் ஹரால்டு தாஸ் கேரக்டர்க்கான கிளிம்ஸ் வீடியோ வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

எனவே ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து வந்த நிலையில் தற்பொழுது அந்த கிளிம்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது. தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தங்களது டுவிட்டர் பக்கத்தில் லியோ படத்தில் அர்ஜுன் கேரக்டர் கூறிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு இருக்கிறது.

இதில் அர்ஜுன் அதிரடியான ஆக்சன் காட்சிகளுடன் நடிக்க செம ஸ்டைலாக சிகரெட்டை பிடித்து மிரட்டுகிறார்.  அர்ஜுன் ஹரால்டு தாஸ் என்ற கேரக்டரில் கொடூர வில்லனாக நடித்து மிரட்டி உள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. லியோ படத்தில் விஜய்க்கு இணையாக அர்ஜுன் கேரக்டரையும் அமைத்து கொடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.

லியோ படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி அன்று வெளியாக இருக்கும் நிலையில் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்து வருகின்றனர். தொடர்ந்து லியோ படத்தின் அப்டேட்டுகள் சோசியல் மீடியாவில் வைரலாக இந்த படத்தில் விஜய், திரிஷா, சஞ்சய் தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஸ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ் கௌதம் மேனன் மற்றும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

லியோ படத்தை பிரம்மாண்டமாக லலித்குமார் தயாரிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசை அமைத்திருக்கிறார். இந்நிலையில் தற்பொழுது அர்ஜுனனின் ஹரால்ட்  தாஸ் கிளிம்ஸ் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.