விடாமுயற்சி படத்தில் வில்லனாக நடிக்கும் மாஸ்டர் பட நடிகர்.? கொக்கி போட்டு தூக்கிய மகிழ் திருமேனி & கோ..

ajith
ajith

துணிவு திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் அஜித்குமார் விடாமுயற்சி படத்தில் நடிக்க ரெடியாக உள்ளார் லைக்கா நிறுவனம் இந்த படத்தை பிரமாண்ட பட்சட்டில் தயாரிக்க விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக தகவல்களும் உறுதியாகின. ஆனால் கடைசி நேரத்தில் விக்னேஷ் சிவனை கழட்டிவிட்டு இயக்குனர் மகிழ்திருமேனியிடம் தற்போது தஞ்சம் அடைந்துள்ளது.

அவர் சொன்ன கதை பிடித்து போகவே தற்பொழுது அந்த கதைக்கு விடா முயற்சி என பெயர் வைத்துள்ளது இதை தவிர மற்றபடி எந்த ஒரு அப்டேட்டையும் பட குழு கொடுக்கவே இல்லை இதனால் படம் டிராப் ஆகிவிட்டது என பலரும் சமூக வலைதள பக்கத்தில் கூறி வந்த நிலையில் முக்கிய சினிமா பிரபலங்கள் பத்திரிகையாளர்கள் என பலரும் அப்படி எல்லாம் கிடையாது.

அஜித் சரியான நேரத்திற்காக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார் என கூறிவந்தனர். இந்த நிலையில் ஒரு அப்டேட் கிடைத்துள்ளது அதாவது அஜித்தும் மகிழ்ந்திருமேனியும் லண்டனில் இருப்பதாகவும் அடுத்த மாதம் ஆரம்பத்திலேயே விடாமுயற்சி படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நடைபெறும் எனவும் கூறப்பட்டன.

இந்த சமயத்தில் விடாமுயற்சி குறித்து மற்றொரு அப்டேட்டும் கிடைத்துள்ளது அதாவது அஜித்திற்கு வில்லனாக அருண் விஜய் அல்லது அருள்நிதி நடிப்பார்கள் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது மாஸ்டர் பல நடிகரை வில்லன் ஆக்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன ஆம் அந்த பிரபலம் வேறு யாரும் அல்ல சமீப காலமாக வில்லன் ரோலில் மிரட்டி வரும் அர்ஜுன் தாஸ் தான்..

விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு மெயின் வில்லனாக நடிப்பார் என கூறப்படுகிறது ஏற்கனவே மாஸ்டர் மற்றும் கைதி போன்ற படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மக்களை மகிழ்வித்தார் தற்பொழுது விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு வில்லனாக இவர் அசத்துவார் எனவும் பலரும் கூறி வருகின்றனர். இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்தால் செம்மையாக இருக்கும் என பலரும் கூறி வருகின்றனர்.