அஜித்தின் “விடாமுயற்சி” அப்டேட் கொடுத்த லைகா நிறுவனத்தின் தலைவர். என்ன சொல்லியுள்ளார் பாருங்கள்.?

Vidaamuyarchi
Vidaamuyarchi

Vidaamuyarchi : தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித் துணிவு படத்தின் வெற்றி தொடர்ந்து லைகா நிறுவனத்துடன் கைகோர்த்து ஒரு படம் பண்ண உள்ளதாக  அறிவிக்கப்பட்டது முதலில் விக்னேஷ் சிவன் தான் இந்த படத்தை இயக்க இருந்தது.

ஆனால் அவர் சொன்ன கதையில் இரண்டாவது பாதியை சிறப்பாக இல்லாததால் தயாரிப்பு நிறுவனம் அவரை நீக்கிவிட்டு மகிழ் திருமேனியிடம் தஞ்சம் அடைந்தது அவர் படத்தின் கதையை சொல்லி ஓகே வாங்கியதோடு மட்டுமல்லாமல்  அஜித்திற்கு தேவையான படி சில மாற்றங்களை செய்து தரமாக உருவாக்கி வருவதாக தகவல்கள் எல்லாம் வெளியாக்கின.

ஆனால் கடந்த இரண்டு மூன்று மாதங்களாக ஆகியும் விடாமுயற்சி படத்தை பற்றி எந்த ஒரு அப்டேட்டும் வரவில்லை. லைகா நிறுவனமும் விடாமுயற்சி படத்தை எந்த ஒரு அப்டேட்டும் கொடுக்காமல் சந்திரமுகி 2, ரஜினி படத்தின் அப்டேட் போன்றவற்றைப் பற்றி அடுத்த அடுத்த தகவல்களை வெளியிட்டு வந்ததால் விடாமுயற்சி படம் டிராப் ஆகிவிட்டதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் சந்திரமுகி 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் கலந்து கொண்டார் அப்பொழுது விடாமுயற்சி அப்டேட் கேட்டனர் அதற்கு பதில் அளித்த அவர் அஜித்தின் விடாமுயற்சி படம் வெகு விரைவிலேயே தொடங்குவது உறுதி என அதிரடியாக கூறியுள்ளார்.

மேலும் விடாமுயற்சி படம் மிக முக்கியமான ப்ராஜெக்ட் இனி அந்த படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளிவரும் என கூறியுள்ளார் இதனால் அஜித் ரசிகர்கள் சந்தோஷம் அடைந்ததோடு மட்டுமல்லாமல் இனி அப்டேட் கொடுத்த நாங்களும் இருக்கும் என கூறி இந்த தகவலை பெரிய அளவில் பரப்பி வருகின்றனர்.