Ajith : தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து ஓடி கொண்டிருப்பவர் நடிகர் அஜித். இவர் கடைசியாக நடித்த துணிவு படம் மாபெரும் வெற்றி பெற்றது தொடர்ந்து லைக்கா நிறுவனம் தயாரிக்க மகிழ் திருமேனி இயக்கயுள்ள விடாமுயற்சி..
படத்தில் நடிகர் அஜித் நடிக்க இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பே சொல்லப்பட்டது ஆனால் அதன் பிறகு எந்த ஒரு தகவலும் வெளிய வரவே இல்லை.. அவ்வளவுதான் படம் ட்ராப் என தகவல்கள் கசிந்த நிலையில் தற்போது பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு விடாமுயற்சி படம் குறித்து ஒரு அப்டேட்டை கொடுத்துள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்..
விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரம் தொடங்கும் என கூறியுள்ளார் மேலும் பேசிய அவர் ஒரு சீன் கூட இந்தியாவில் எடுக்கக்கூடாது எல்லாமே வெளிநாட்டில் தான் எடுக்க வேண்டும் என்று அஜித் உறுதியாக கூறிவிட்டார் எனவே முழு படபிடிப்பும் வெளிநாட்டில் தான் நடக்க உள்ளது.
ஒரே கட்டமாக படத்தை எடுத்து முடிக்க பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர் ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரம் படப்பிடிப்பு தொடங்கி 40 நாட்கள் தொடர்ச்சியாக எடுக்கப்படும் முடிந்த வரை பொங்கலுக்கு இந்த படத்தை வெளியிட முனைப்போடு வேலை செய்து வருகிறது படக்குழு..
இந்த படத்தில் ஜெயிலர் பட நடிகை தமன்னா தான் ஹீரோயின் விடாமுயற்சி படத்தின் கதை ஹீரோவை மையமாகக் கொண்டது என செய்யாறு பாலு பேட்டியில் கூறியுள்ளார். இந்த தகவல் தல ரசிகர்களையும் தாண்டி பலரது கவனத்தை ஈர்த்து மேலும் சமூக வலைதள பக்கத்தில் ட்ரெண்டாகி வருகிறது.