அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த விடாமுயற்சி.. அட இவங்க எல்லாம் நடிக்கிறாங்க.? வெளிவந்த அப்டேட்

Vidaamuyarchi Ajith
Vidaamuyarchi Ajith

Vidaamuyarchi : நடிகர் அஜித்குமார் லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக இருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்க போவதாக மே ஒன்றாம் தேதி (அஜித்தின் பிறந்தநாள் அன்று ) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது இருப்பினும் இரண்டு மாதங்கள் ஆகியும்..

எந்த ஒரு அப்டேட்டும் வெளிவராததால் கோபப்பட்ட அஜித் ரசிகர்கள் சமூக வலைதள பக்கத்தில் விடாமுயற்சி அப்டேட் கேட்டனர். ஆனால் எந்த ஒரு தகவலுமே வெளியாகாததால் கோபத்தின் உச்சிக்கே சென்ற அஜித் ரசிகர்கள் சந்திரமுகி 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்த லைகா நிறுவனத்தின் தலைவர் சுபாஷ் காரன் அவரிடமே நேரடியாக விடாமுயற்சி அப்டேட் கேட்டனர்.

அதற்கு அவரும் அஜித்தின் விடாமுயற்சி எங்களுக்கு மிகப்பெரிய ப்ராஜெக்ட் வெகு விரைவு விலையை சூட்டிங் தடவவும் என கூறினார். அதனை தொடர்ந்து பல தகவல்கள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன தற்போது அஜித்தின் விடாமுயற்சி குறித்து ஒரு தகவல் வைரலாகி வருகிறது.

அதாவது இந்த மாத இறுதியில் அபுதாவியில் முதல் கட்ட ஷூட்டிங் தொடங்க உள்ளது என கூறப்படுகிறது மேலும் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார் அவர்களுடன் இணைந்து அர்ஜுன் தாஸ், சஞ்சய் தத் ஆகியோர்கள் நடிக்க பெருமளவு வாய்ப்புகள் இருக்கும் என கூறப்படுகிறது விடாமுயற்சி படம் முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் த்ரில்லர் கலந்த ஒரு படமாக எடுக்கவே..

இயக்குனர் மகிழ் தருமேனி திட்டமிட்டு இருக்கிறார் என சொல்லப்படுகிறது படம் அடுத்த வருடம் 2024 கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாகும் என பேச்சுக்கள் எழுந்துள்ளது அதுவும் திட்டமிட்டபடி இந்த மாதம் ஷூட்டிங் அறிபிது வெற்றிகராம நடந்தால் 2024ல் கோடை விடுமுறையில் வெளியாவது உறுதி எனப் கூறுகின்றனர்.