சூட்டிங்கை ஆரம்பித்த அஜித்தின் “விடாமுயற்சி” – லைகா வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்

Vidaamuyarchi latest update
Vidaamuyarchi latest update

Vidaamuyarchi latest update : நடிகர் அஜித்குமார் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து தனது ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறார் அந்த வகையில் துணிவு படம் வெளிவந்து வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்து ஒரு வெற்றிப் படத்தை கொடுக்க லைகா நிறுவனத்துடன் கூட்டணி அமைதார் முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக கூறப்பட்டது.

ஆனால் அவர் சொன்ன கதை சிறப்பாக இல்லாததால் அவரை நீக்கி விட்டு அடுத்ததாக மகிழ் திருமேனிடம் தஞ்சம் அடைந்தது. அவர் சொன்ன கதை பிடித்து போகவே அதிரடியாக விடாமுயற்சி என தலைப்பு வைக்கப்பட்டு பெயர்கள் எல்லாம் ரிலீஸ் ஆனது ஆனால் இரண்டு மாதம் கழித்து எந்த ஒரு அப்டேட்டும் வெளிவராததால் கட்டுபான ரசிகர்கள் அப்டேட் கேக்க ஆரம்பித்தனர்.

அப்படி சந்திரமுகி 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அப்டேட் கேட்டனர் அதற்கு லைகா நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன் சொன்னது அஜித்தின் விடாமுயற்சி எங்களுக்கு மிகப்பெரிய ப்ராஜெக்ட் வெகு விரைவல் ஷூட்டிங் தொடங்க இருக்கிறோம் என சொல்லி அஜித் ரசிகர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்தார் அதனை தொடர்ந்து விடாமுயற்சி பற்றிய தகவல்கள் அடுத்தடுத்து வெளி வருகின்றன.

அதாவது அஜித்தின் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் செப்டம்பரில் தொடங்கி அடுத்த வருடம் ஜனவரியில் முடியும் என்றும் படத்தின் படப்பிடிப்பு அபுதாபி, துபாய் போன்ற இடங்களில் நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது முதலில் அஜித்துக்கான போர்ஷனை முடிக்கவும் படகுழு திட்டமிட்டு இருப்பதாக கூறப்பட்டு வந்தன. இதை ஒரு சில பேர் உண்மை என்றும் சிலர் இது எல்லாம் கிடையாது என கூறி வந்தனர்.

இந்த நிலையில் லைகா நிறுவனமே முன்வந்து தனது டுவிட்டர் பக்கத்தில் லைட், கேமரா, ஆக்சன் என சொல்லி விடாமுயற்சி அஜித் சார் என கூறியுள்ளது இதையெல்லாம் வைத்துப் பார்க்கையில் அஜித்தின் விடாமுயற்சி சூட்டிங் ஆரம்பித்துவிட்டது என தெரிய வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் தற்பொழுது சந்தோஷத்தில் இருக்கின்றனர். இதோ நீங்களே பாருங்கள்..