விடாமுயற்சி போஸ்டரே வெளியிட்டு ஆட்டத்தை ஆரம்பித்த மகிழ்திருமேனி.! அஜித்தின் கெட்டப் இதுதானா.?

VidaaMuyarchi movie

vidaamuyarchi(vidamuyarchi) : நடிகர் அஜித் கடைசியாக வினோத் இயக்கத்தில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது, துணிவு திரைப்படத்தில் அஜித் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அஜித் உடன் இணைந்து மஞ்சு வாரியர், ஜான் கொக்கேன் சமுத்திரகனி ஆகியவர்கள் நடித்திருந்தார்கள்.

படத்தை போனி கபூர் அவர்கள் தான் தயாரித்திருந்தார் ஜிப்ரான் இசையில் பாடல் அனைத்தும் மாபெரும் ஹிட் அடித்தது. இந்த நிலையில் அஜித் அடுத்ததாக யார் திரைப்படத்தில் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வந்த நிலையில் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என அறிவிப்பு வெளியானது. ஆனால் திடீரென விக்னேஷ் சிவனை அஜித் படத்திலிருந்து நீக்கி விட்டார்கள்.

பிறகு விக்னேஷ் சிவன் இயக்க இருந்த அஜித்தின் திரைப்படத்தை மகிழ்திருமேனி இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள் படத்தை லைக்கா நிறுவனம் தான் தயாரிக்க இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் படத்தை எப்பொழுது தொடங்குவார்கள் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் படம் தொடங்காமல் இருந்ததால் ரசிகர்கள் கொஞ்சம் கவலையில் இருந்தார்கள்.

படத்தின் டைட்டிலை வெளியிட்ட பிறகு எந்த ஒரு அதிகார பூர்வ அறிவிப்பையும் படக்குழு வெளியிடாமல் மௌனம் காத்து வந்தது இந்த நிலையில் விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக திரிஷா நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் மகிழ் திருமேனி தன்னுடைய அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் ஒரு போஸ்டரை வெளியிட்டு சூட்டிங் தொடங்க இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் அந்த போஸ்டரில் மேஜையின் மீது ஒரு மெழுகு தலை இருக்கிறது இதுதான் அஜித்தின் கெட்டப் என தெரிகிறது. இந்த போஸ்டர் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

vidaamuyarchi
vidaamuyarchi