Vidaamuyarchi : நடிகர் அஜித் குமார் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வருகிறார் அந்த வகையில் துணிவு திரைப்படத்தை தொடர்ந்து மகிழ் திருமேனிவுடன் கைகோர்த்து விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக உருவாகி வந்தாலும் இந்த படத்திலும் சமூக அக்றை கலந்த மெசேஜ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் அஜித்தின் கடந்த சில வலிமை, துணிவு, நேர்கொண்ட பார்வை போன்ற படங்களில் நல்ல கருத்துக்கள் இடம்பெற்று வருகின்றன. அது பெண்கள் மத்தியில் நல்ல கைதட்டளை வாங்கி வருகிறது. அதனால் விடாமுயற்சியில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விடாமுயற்சி படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது அஜித்துடன் இணைந்து ரெஜினா, த்ரிஷா, அர்ஜுன் போன்றவர்கள் நடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. அடுத்த கட்ட சூட்டிங் அபுதாபி, துபாய் போன்ற இடங்களில் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளி வருகின்றன விடாமுயற்சி படம் அடுத்த வருடம் சம்மர் ஸ்பெஷலாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .
இப்படி இருக்கின்ற நிலையில் விடாமுயற்சி படத்தின் பிரீ பிசினஸ் தொடங்கிவிட்டதாம் அதன்படி OTT ரைட்ஸ், சாட்டிலைட் ரைட்ஸ் இரண்டுமே விற்கப்பட்டுள்ளதாக கோலிவுட் பக்கத்தில் ஒரு பேச்சு கிளம்பி உள்ளது. விடாமுயற்சி OTT ரைட்ஸ் உரிமையை netflix நிறுவனம் கைப்பற்றி உள்ளதாகவும், அதே போல சாட்டிலைட் உரிமையை சன் டிவியும் கைப்பற்றி உள்ளதாம்.
இரண்டு சாட்டிலைட் உரிமையுமே பல கோடிகளுக்கு விற்பனையாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் மட்டும் விடாமுயற்சி சுமார் 100 கோடியிலிருந்து 150 கோடி வரை பிசினஸ் செய்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அஜித் ரசிகர்கள் மத்தியில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.