Ajith : தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக வருவர் அஜித். இவர் தான் உண்டு தான் வேலை உண்டு என இருக்கும் போதே ரசிகர்கள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர் அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் பெரிய வெற்றி பெற்றது.
தொடர்ந்து விடாமுயற்சி படத்தில் நடிக்க இருக்கிறார் ஆனால் இந்த படம் தொடர்ந்து தள்ளிக்கொண்டே போகிறது. ஏன் இந்த படம் தள்ளி கொண்டு போய் இருக்கிறது என்பது குறித்து ஜோதிடர் பேசி உள்ளார் மேலும் அஜித்தின் சமீபகால படங்களில் ஏன் “வி” டைட்டில் வைக்கப்படுகிறது என்ற காரணத்தையும் சொல்லி இருக்கிறார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..
அவர் பெயர் டாக்டர் அம்பானி ராஜா.. இவர்தான் அஜித் படங்களுக்கு பெயர் வைக்கிறாராம் ஆரம்பம், வேதாளம், என்னை அறிந்தால் போன்ற படங்களுக்கு இவர்தான் பெயர் வைத்தாராம் அதில் அஜித்தை பொருத்தவரைக்கும் தயாரிப்பாளர்கள் ஓகே சொன்னால் மட்டுமே அந்த பெயரை ஓகே சொல்வாராம்..
ஏனெனில் அவர்கள் தான் படத்திற்கு பணம் போடுகிறார்கள் அதனால் தயாரிப்பாளரின் விருப்பத்திற்கு விட்டு விடுவாராம் இந்த மூன்று படங்களுமே அஜித் இயக்குனர் தயாரிப்பாளர் ஆகிய மூவரின் விருப்பதில் தான் பெயர் வைக்கப்பட்டது தான் மேலும் “வி” வொர்க் ஆனது என்பதையும் சொல்லி இருக்கிறார் பொதுவாக வி என்ற எழுத்து ரிஷப ராசியில் வருமாம் அஜித்தின் ஜென்ம ராசி கடக ராசியாம்.
அதனால் கடக ராசிக்கு லாபகரமான ராசி ரிஷப ராசியிடம் இதனாலேயே அந்த “வி” எழுத்து வொர்க் அவுட் ஆனது.. விடாமுயற்சி தள்ளி போவதற்கு அஜித்துக்கு கொஞ்சம் பிரேக் தேவைப்படுகிறது என்றும், கெட்டப் எல்லாம் மாற்ற வேண்டும் என்றும் உடலளவில் அவரை தயார்படுத்த வேண்டும் என்பதற்காக விடாமுயற்சி படம் தாமதம் ஆகிறது என கூறியுள்ளார்.