Ajith – Trisha Photo: தல அஜித் மற்றும் திரிஷா அஜர்பைஜானில் படப்பிடிப்பின் பொழுது எடுத்துக்கொண்ட க்யூட்டான புகைப்படம் வைரலாகி வருகிறது. அஜித் நடிப்பில் கடைசியாக இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு துணிவு திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இந்த படத்தினை தொடர்ந்து தற்பொழுது மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.
விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அஜர்பை ஜானில் தொடங்கப்பட்டது தற்பொழுது புத்தாண்டு கொண்டாடுவதற்காக சிறிய இடைவேளை எடுத்துள்ளார் நடிகர் அஜித். இவரைத் தொடர்ந்து டோவினோ தாமஸ் மற்றும் நடிகை திரிஷா போன்றவர்களும் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரேக் எடுத்துக் கொண்ட நாடு திரும்பினார்கள்.
விஜயகாந்த் செய்த மிகப்பெரிய 2 தவறுகள்.. முக்கிய பிரபலம் சொன்ன தகவல்
இவர்கள் இருவரும் ஜனவரி முதல் வாரத்தில் மீண்டும் சூட்டிங் இணைய உள்ளனர். விடாமுயற்சி படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர்கள் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த மே மாதமே வெளியானது ஆனால் சில காரணங்களால் ஷூட்டிங் தாமதம் ஆனது இதனை அடுத்து அக்டோபர் மாதத்தில் அஜர்பை ஜானில் முதல் கட்ட ஷூட்டிங் துவங்கி ஒரு மாதத்திற்கு மேல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து இரண்டாவது ஷெட்யூலில் அஜித், அர்ஜுன் இணைந்து கார் ரேஸில் நடித்த காட்சிகளை பார்த்தோம். இவ்வாறு விடா முயற்சி படத்தின் சூட்டிங் முழுவதும் முடிந்து அடுத்த ஆண்டு அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு மே ஒன்றாம் தேதி திரையரங்கங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் அஜித் மற்றும் திரிஷா இணைந்து நடிக்கும் நிலையில் இதற்கு முன்னதாக இருவரும் மங்காத்தா திரைப்படத்தில் நடித்திருந்தனர். பல ஆண்டுகள் கழித்து இவர்கள் இருவரும் தற்பொழுது விடா முயற்சி திரைப்படத்தில் மீண்டும் இணைந்துள்ளார்கள். எனவே ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்து வருகின்றனர். இந்நிலையில் முதல் கட்ட ஷூட்டிங் போது அஜர்பைஜானில் திரிஷா, அஜித் எடுத்துக்கொண்ட ஃகியூட்டான புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.