“விடாமுயற்சி” படத்தில் நடிக்கவிருக்கும் 4 பிரபலங்கள்.? ஒன்னுக்கு ஒன்னு சலிச்சதே கிடையாது – வைரலாகும் செய்தி

AJITH
AJITH

Vidaamuyarchi : துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு விடாமுயற்சி படத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக சொல்லப்பட்டது லைகா நிறுவனம் தயாரிக்க மகிழ் திருமேனி இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின ஆனால் அது சொல்லி இரண்டு மாதங்கள் ஆகியும்..

இந்த படம் இன்னமும் தொடங்காதது அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. அஜித்தும் தொடர்ந்து பைக் ரெய்டு செய்து கொண்டே இருப்பதால் ஷூட்டிங் தொடங்குவதற்கான அறிகுறியே தென்படவில்லை இந்த நிலையில் விடாமுயற்சி படம் குறித்து ஒரு செம்ம அப்டேட் கிடைத்துள்ளது அதாவது வருகின்ற ஆகஸ்ட் 18ஆம் தேதி விடாமுயற்சி படத்தின் சூட்டிங் தொடங்கும் என தகவல்கள் வெளியாகின்றன.

அதுவும் முதல் சூட்டை 40 நாள் நடக்கும் பெரும்பாலும் அஜித்திற்கான காட்சிகளை முடிக்க இயக்குனர் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் சென்னை, புனே, ஹைதராபாத் மற்றும் வெளிநாடுகளில் படமாக்க பட குழுவினர் திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

விடாமுயற்சி படத்தில் அஜித்துடன் இணைந்து நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்தும் தகவல் வெளியாகி உள்ளது. படத்தில் மொத்தம் இரண்டு ஹீரோயின்களாம் முக்கிய கதாநாயகியாக திரிஷா நடிக்க இருப்பதாகவும் தமன்னா இரண்டாவது கதாநாயகியாக ஒப்பந்தமாக பேச்சு வார்த்தைகள் போய்க்கொண்டிருக்கிறது.

மேலும் வில்லனாக ஆக்சன் கிங் அர்ஜுன் மற்றும் அர்ஜுன் தாஸ் நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் போய்க்கொண்டிருக்கிறது இந்த நான்கு பிரபலங்களும் விடாமுயற்சி படத்தில் நடிக்க அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கும் என கூறப்படுகிறது.

அர்ஜுனும் அஜித்தும் கடைசியாக இணைந்த மங்காத்தா திரைப்படம் பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த காம்பினேஷனை ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் இது நடக்கும் பட்சத்தில் இந்த படமும் ஹிட் அடிப்பது உறுதி.