Nayanthara : தென்னிந்திய சினிமா உலகில் பாப்புலரான நடிகையாக வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இவர் தனது திரைப் பயணத்தை ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரையிலும் டாப் ஹீரோக்களுடன் படம் பண்ணுவது இல்லை என்றால் சோலோ படங்களில் நடித்து வெற்றிகளை அள்ளி வருகிறார்.
அதன் காரணமாகவே இவரது மார்க்கெட் உச்சியிலேயே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது இப்படி ஓடிக்கொண்டிருக்கும் நயன்தாரா அண்மையில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் இரு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர்.
ஷூட்டிங் நேரம் போக மீதி நேரங்களில் தனது குழந்தைகளுடன் தான் அதிகம் செலவிட்டு வருகிறார் அண்மையில் கூட ஓணம் பண்டிகையை முன்னிட்டு தனது குழந்தைகளுடன் இவர் சாமி கும்பிட்ட புகைப்படம் வைரலானது அதற்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு தனது குழந்தைகளை வெளி உலகத்திற்கு காட்டினார் இப்படி குழந்தைகளுடன் பொழுதை கழித்து வருகிறார்.
இந்த நிலையில் பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் விடாமுயற்சி படம் இன்று வரை தள்ளி போக காரணமே நயன்தாரா விட்ட சாபம் என கூறி பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம் விடாமுயற்சி படத்தில் விக்னேஷ் சிவனை தூக்கிய போது நயன்தாரா..
இரண்டு, மூன்று முறை அஜித்திற்கு போன் செய்து கேட்டுள்ளார் அப்பொழுது அஜித் மனம் இறங்கவில்லையாம் இதனால் நயன்தாராவின் சாபம் தான் அஜித்தின் விடாமுயற்சி படம் இன்னும் கிடப்பிலேயே கிடக்கிறது என கூறி உள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் வாய்க்கு வந்ததை உளறாதே எனக் கூறி கமெண்டடித்து வருகின்றனர்.