Vidaamuyarchi : சினிமாவை பொருத்தவரை ஒரு திரைப்படத்தில் ஹீரோ என்பது எவ்வளவு முக்கியமான ஒன்று அதற்கு நிகராக வில்லன் கதாபாத்திரம் அமைய வேண்டும் அப்பொழுதுதான் அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை நிலைநாட்டும். அந்த வகையில் சமீப காலமாக தமிழ் சினிமாவில் ஹீரோவுக்கு நிகராக வில்லன் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டு வருகிறது.
கடைசியாக வெளியாகிய விக்ரம் திரைப்படத்தில் வில்லனுக்கு மிகப்பெரிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேபோல் தற்பொழுது வெளியாக இருக்கும் லியோ திரைப்படத்திலும் வில்லனுக்கு மிகப்பெரிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாக பலரும் கூறி வருகிறார்கள் அந்த வகையில் லியோ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பல மடங்காக அதிகரித்துள்ளது.
அந்த வகையில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் தான் விடா முயற்சி இந்த திரைப்படத்தின் டைட்டில் சமீபத்தில் வெளியானது, அதன் பிறகு எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாமல் ரசிகர்களை சோர்வடைய செய்துள்ளது. இப்படி அஜித் ரசிகர்கள் அமைதியாக இருக்கும் இந்த தருணத்தில் தற்பொழுது ஒரு தகவல் வெளியாகிய பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தில் ஏற்கனவே திரிஷா நடிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அதனை தொடர்ந்து தமன்னாவும் இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளார் எனவும் தகவல் கிடைத்தது. அப்படி இருக்க அஜித்திற்கு நிகராக வில்லன் கதாபாத்திரத்தில் அர்ஜுன் மற்றும் அர்ஜுன் தாஸ் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை ஆனால் விரைவில் வெளியாக இருக்கிறது என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே அஜித் மற்றும் அர்ஜுன் தாஸ் இருவரும் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தில் நடித்துள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் அர்ஜுன் தாஸ் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருப்பார். இதனைத் தொடர்ந்து அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தில் தற்பொழுது அர்ஜுன் மற்றும் அர்ஜுன் தாஸ் இணைய இருப்பதாக தகவல் வெளியானதால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.
மேலும் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பை ஹைதராபாத், பூனே சென்னை, அபுதாபி ஆகிய இடங்களில் நடத்த இருக்கிறார்கள் பட குழு இந்த திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட முறையில் தயாரிக்க இருக்கிறது.