விடாமுயற்சி திரைப்படம் ஆக்சன், திரில்லர் படமா.? மகிழ் திருமேனி பிறந்தநாளில் சூசகமாக சொன்னா தயாரிப்பு நிறுவனம்

Magizh thirumeni
Magizh thirumeni

Magizh Thirumeni : ஆக்சன் படங்களை எடுப்பதில் ரொம்பவும் கைதேர்ந்தவர் இயக்குனர் மகிழ் திருமேனி. முதலில் “முன் தினம் பார்த்தேனே” என்னும் படத்தை எடுத்து அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து இவர் எடுத்த ஒவ்வொருவரும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது அந்த வகையில் அருண் விஜய் வைத்து இவர் எடுத்த தடையற தாக்கப்படும் முழுக்க முழுக்க ஆக்சன் படம் தான் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது.

அதனை தொடர்ந்து வெளியான மீகாமன் திரைப்படம் இந்தப் படம் போதை பொருளை மையமாக வைத்து உருவான ஒரு படம் என்பது குறிப்பிடத்தக்கது சொல்லப்போனால் லோகேஷ் தற்போது உருவாக்கி வரும் போதை பொருள் சம்பந்தமான படத்திற்கு முன்னோடியாக இந்த படம் இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் தடம். அருண் விஜய்க்கும் சரி, மகிழ்ந்திருமேனிக்கும் நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. சிறு இடைவெளிக்கு பின் உதயநிதியுடன் கலகத் தலைவன் படத்தை எடுத்தார் இப்போ அஜித்தை வைத்து விடாமுயற்சி படத்தை எடுக்க உள்ளார். அதற்கான அனைத்து வேலைகளும் தீவிரமாக போய்க்கொண்டிருக்கிறது.

வெகு விரைவிலேயே ஷூட்டிங் நடக்கும் என தகவல்கள் வெளி வருகின்றன படத்தின் பெரும்பாலான சூட்டிங் அபுதாபி, துபாய் போன்ற இடங்களில் நடக்க இருப்பதாகவும் திரிஷா, அர்ஜுன், அர்ஜுன் தாஸ், பிக்பாஸ் ஆரவ், சஞ்சய் தத் போன்றவர்கள் நடிக்க இருப்பாதாகவும் கூறப்படுகிறது இந்த நிலையில் இன்று பிறந்தநாள் காணும் மகிழ் திருமேனி அவர்களுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர் அதன்படி விடாமுயற்சி படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைகா மகிழ் திருமேனி புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.

மேலும் ஆக்சன் மற்றும் திரில்லர் படங்களை எடுப்பதில் ரொம்பவும் கைதேர்ந்தவர்.. விடாமுயற்சி மேலலோங்குகிறது என கூறியுள்ளது இதையெல்லாம் வைத்துப் பார்க்கையில் விடாமுயற்சி படம் கூட ஒருவேளை ஆக்சன் மற்றும் திரில்லர் கலந்த படமாக இருக்கலாம் என அதைத்தான் தயாரிப்பு நிறுவனம் சூசகமாக சொல்லி உள்ளது என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள்.