vidaamuyarchi : அஜித் நடிப்பில் வெளியாகிய பில்லா, வீரம், வேதாளம், துணிவு ஆகிய திரைப்படங்களில் கலை இயக்குனராக பணியாற்றி வந்தவர் மிலன் அதுமட்டுமில்லாமல் அண்ணாத்த, 10 தல ஆகிய திரைப்படங்களிலும் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
அஜித் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் கலை இயக்குனராக பணியாற்றி வருபவர் மிலன் இவர் விடாமுயற்சி திரைப்படத்திற்காக அஜர்பைஜான் நாட்டிற்காக சென்ற நிலையில் இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்திருக்கிறார்.
கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டேவின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?
அக்டோபர் 15ஆம் தேதி காலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது,
மாரடைப்பு ஏற்பட்ட உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவசர அவசரமாக அழைத்துச் சென்றார்கள் ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார். இவர் முதன்முதலாக கலாப காதலன் என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார்
இவர் தொடர்ந்து இரண்டு நாட்களாக படப்பிடிப்பில் கலந்து கொண்டதாகவும் அந்த பணிச்சுமை அதிகமானதால் மாரடைப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது கலை இயக்குனர் திடீரென மரணமடைந்த செய்தி அஜித் ரசிகர்களுடைய பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது ஏற்கனவே மிக லேட்டாக பட பிடிப்பு ஆரம்பித்த நிலையில் திடீரென இப்படி ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
நான் என்ன உன் வீட்டு வேலைக்காரனா.. வாடா போடா என பேசியதற்கு ஜோவிகாவை விலாசி விஷ்ணு
விடாமுயற்சி திரைப்படம் அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து சூட்டிங் தொடங்கிவிட்டது ஆரம்பத்தில் இருந்து அஜர்பைஜான் நாட்டில் தான் படப்பிடிப்பு ஆரம்பித்ததாக தகவல் கிடைத்துள்ளது அதிகாலை கலை இயக்குனர் எழுந்திருக்கும் பொழுது நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும் உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்ததாகவும் கூறுகிறார்கள் இந்த தகவல் திரையுலகினரையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.