Vidaamuyarchi : தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்கள் பலரும் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வருகின்றனர் அந்த வகையில் நடிகர் அஜித் துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து லைகா நிறுவனத்துடன் படம் பண்ண போவதாக தகவல் உடனே வெளியானது.
ஆனால் இயக்குனர் விக்னேஷ் சிவன் சொன்ன கதை சிறப்பாக இல்லாததால் நீக்கி விட்டு அடுத்து இயக்குனரை தேடும் பணியில் இறங்கியது மகிழ் திருமேனி சொன்ன கதை பிடித்துப் போகவே விடாமுயற்சி என டைட்டில் வைத்து அதிகாரப்பூர்வமாக அஜித்தின் பிறந்தநாள் மே ஒன்றாம் தேதி சொல்லப்பட்டது.
அதன் பிறகு இரண்டு மாதங்கள் ஆகிய எந்த ஒரு தகவலும் வெளி வராததால் கடுப்பான ரசிகர்கள் சந்திரமுகி 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரனிடம் விடாமுயற்சி அப்டேட் கொடுங்கள் என கேட்டனர். பிறகு தான் அவர் மேடை ஏறி விடாமுயற்சி படம் எங்களுக்கு மிகப்பெரிய ஒரு ப்ராஜெக்ட் நிச்சயம் ஷூட்டிங் தொடங்கும் என உறுதியாக சொன்னார்.
அதன் பிறகு விடாமுயற்சி படம் குறித்து அடுத்தடுத்த தகவல்கள் வெளிவந்த வண்ணமே இருக்கிறது. விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் துபாயில் தொடங்கும் என்றும் அஜித் அதில் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது ஷூட்டிங் செப்டம்பர் மாதம் ஆரம்பித்து அடுத்த வருடம் ஜனவரி மாதம் முடியும் அடுத்த வருடம் கோடை விடுமுறையில் விடாமுயற்சி படம் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படத்தில் அஜித்துக்கு ஜோடி திரிஷா அல்லது தமன்னா கிடையாது தற்போதைய நிலவரப்படி விடாமுயற்சி படத்தில் ஹீமா குரோஷி தான் கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது இதற்கு முன்பு அஜித்தின் வலிமை படத்தில் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது மீண்டும் இந்த ஜோடி இணையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.