விடாமுயற்சி படம் டிராப்பா.? அஜித்தை பத்தி தெரியாம பேசாதீங்க.. கொந்தளித்த பத்திரிக்கையாளர்

ajith

நடிகர் அஜித்குமார் சமீபகாலமாக சிறந்த இயக்குனர்களுடன் கைகோர்த்து படம் பண்ணுகிறார் அதனால் அவருடைய படங்களும் பெரிய அளவு வெற்றியை பதிவு செய்கின்றனர் கடைசியாக நடித்த துணிவு திரைப்படம் 230 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது. அதனைத் தொடர்ந்து இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க லைகா நிறுவனத்துடன் கைகோர்த்தார்.

முதலில் விக்னேஷ் சிவன் படத்தை இயக்குவதாக இருந்தது ஆனால் அவர் சொன்ன கதையின் இரண்டாவது பாதி அந்த அளவிற்கு சுவாரசியம் இல்லாததால் அவரை நீக்கிவிட்டு மகிழ் திருமேனிடம் தஞ்சம் அடைந்தது அவர் சொன்ன கதை அஜித் மற்றும் லைகா நிறுவனத்திற்கு ரொம்ப பிடித்துப் போகவே தற்பொழுது “விடாமுயற்சி” என்ற பெயரில் படம் உருவாக இருக்கிறது.

இருந்தாலும் ஷூட்டிங் எப்பொழுது தொடங்குகிறது என்பது குறித்து இதுவரை சரியான தகவல்கள் வெளி வராததால் படம் டிராப் ஆகிவிட்டதா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர் இந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரபல பத்திரிகையாளர் சங்கர் பேசி உள்ளார் அவர் சொன்னது..

அதாவது ஊடகத்தை பொறுத்தவரைக்கும் சரி, சமூக வலைதளத்தை பொறுத்தவரைக்கும் சரி ஒரு படத்தை பற்றி அப்டேட் வந்ததும் உடனே படத்தை வெளியிட வேண்டும் என்று தான் அவசரப்படுகிறார்கள் ஒரு பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தை எப்படி ட்ராப் செய்ய முடியும் அதுவும் அஜித்தின் இயல்பு தெரியாமல் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

அவர் பொதுவாகவே ஒரு சரியான நேரத்திற்காக காத்திருக்க கூடியவர் அது படமாகட்டும், பைக் ரேஸ் ஆகட்டும் நேரத்தை பார்த்து இறங்குவார் அதேபோல் தான் இந்த படத்திற்கும் காத்துக் கொண்டிருக்கிறார். சரியான நேரம் வரும்போது படம் கண்டிப்பாக தொடங்கும் மேலும் ஜூன் இரண்டாவது வாரத்தில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாகும் அதுவரை இந்த மாதிரி பேசுவதை நிறுத்திக் கொள்வது மிகவும் நல்லது என கூறி உள்ளார்.