ஆறு வருடங்களுக்கு மேலாக விக்கி நயன்தாரா இருவரும் காதலித்து வந்த நிலையில் ஒரு வழியாக வருகின்ற ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர். முதலில் இவர்கள் திருமணம் திருப்பதியில் நடக்க போவதாக கூறப்பட்டது அதன்பிறகு மகாபலிபுரம் என கூறியவாறு தற்போது இரண்டுமே இல்லை.
ஜூன் 9ஆம் தேதி புதுச்சேரியில் உள்ள ஒரு பிரபல விடுதி ஒன்றில் தான் இவர்களது திருமணம் அரங்கேற இருப்பதாக கூறப்படுகிறது இதில் 20க்கும் மேற்பட்ட சினிமா பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது குறிப்பாக அஜித் விஜய் சமந்தா விஜய் சேதுபதி போன்றவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம் சினிமா தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் மற்றும் உறவினர்களும் நண்பர்களும் இந்த திருமணத்தில் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது. நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் செய்து கொண்டாலும் ஹனிமூன் செல்ல முடியாத சூழ்நிலை அமைந்துள்ளது.
நயன்தாரா உடல் ரீதியாக சில கோளாறுகள் இருப்பதால் அதை சரி செய்ய ஆறு மாதம் கேரளா சென்று ஆயுர்வேத சிகிச்சை மேற்கொள்ள இருக்கிறார் அதன்பிறகு ஹனிமூன் செல்வார் என்ற தகவல் வெளிவந்த வண்ணமே தான் இருக்கிறது. எப்படியோ முதலில் திருமணம் செய்தால் சந்தோஷம் தான்.
அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர் காரணம் நயன்தாராவுக்கு வயதாகிக் கொண்டே இருக்கிறது தற்போது நயன்தாராவுக்கு 36 வயதாம். விக்கி – நயன்தாரா திருமண விழாவில் ஒரு மிகப்பெரிய சம்பவத்தையும் செய்ய இருக்கிறது அதாவது இவர்களது திருமணத்தை ஒரு ஆவணப்படமாக கௌதம் வாசுதேவ் மேனன் எடுக்கவிருக்கிறார் இதை நெட்பிளிக்ஸ் வெளியிட இருப்பதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.