இரவோடு இரவாக ஹனிமூனுக்கு சென்ற விக்கி – நயன்தாரா..!எந்த நாட்டிற்கு தெரியுமா.? வெளிவந்த புகைப்படம்.

nayanthara-
nayanthara-

தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. படங்களில் தொடர்ந்து வெற்றியை ருசித்தாலும் வயதாகிக் கொண்டே போவதால் ரசிகர்கள் எப்பொழுது திருமணம் செய்து கொள்கிறீர்கள் என நயன்தாராவை கேட்டு வந்தது உண்டு.

அதற்கு முடிவு கட்டும் வகையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த ஏழு வருடங்களாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்த நிலையில் ஒருவழியாக சினிமா பிரபலங்கள் நண்பர்கள் உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு இவர்கள் இருவரும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வந்தனர்.

அதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் தனது மாமியார் வீட்டுக்கு சென்று அசத்தினார் மேலும் கேரளாவில் முக்கிய இடங்களுக்கு சென்று வந்ததன் புகைப்படங்கள் கூட இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகியது. திருமணம் முடிந்திருந்தாலும் ஹனிமூனுக்கு செல்ல நயன்தாரா 6 மாதம் அவகாசம் எடுத்துக் கொள்வார் என கூறப்பட்டது.

ஏனென்றால் உடலில் சில பிரச்சனைகள் இருக்கிறது என கூறப்பட்டு வந்த நிலையில் திடீரென லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் விக்கி இருவரும் ஹனிமூனுக்கு சென்றுள்ளதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது ஆம் இவர்கள் இருவரும் தாய்லாந்து நாட்டிற்கு ஹனிமூனுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அங்கு விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன இதுவே தற்போது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது எது எப்படியோ புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தற்போது லைக்குகளை அள்ளி வீசி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.