தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இவர் சினிமா உலகில் தனது பயணத்தை ஆரம்பித்ததில் இருந்து இப்பொழுது வரையிலும் உச்ச நட்சத்திர நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிப்பது மற்றும் சோலோ படங்களில் நடித்து வெற்றி கண்டதால் அவரது மார்க்கெட் குறைந்தபாடும் இல்லாமல் இன்னும் உச்சத்திலேயே இருக்கிறது.
சினிமா உலகில் வெற்றியை ருசித்தாலும் நிஜ வாழ்க்கையில் பல சர்ச்சைகளிலும் பிரச்சனைகளிலும் சிக்கி தவித்தார். இதிலிருந்து வெளிவர உதவியது விக்னேஷ் சிவன் தான் விக்னேஷ் சிவனுடன் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் பணியாற்றும் பொழுது இருவருக்கும் ரொம்ப பிடித்து போகவே இருவரும் நெருங்கி பழகினர். பின் காதலித்து ஆறு வருடங்கள் கழித்து கடந்த ஜூன் ஒன்பதாம் தேதி சினிமா பிரபலங்கள் உறவினர்கள் நண்பர்கள் என அனைவரது முன்னிலையிலும்..
நயன்தாரா விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இந்த ஜோடி குடும்பம், சினிமா வாழ்க்கை என ஒரு கோடு போட்டு வாழ்ந்து வருகிறது. விக்கியும் சரி நயன்தாராவும் சரி படப்பிடிப்பை சீக்கிரமாக முடித்துவிட்டு அடுத்த படத்தில் கமிட் ஆகுவதற்கு முன்பாக ஓய்வெடுப்பதற்காக அவ்வபோது வெளிநாட்டிற்கு பறந்து விடுகின்றனர். அதுபோல இப்பொழுது ஸ்பெயின் நாட்டிற்கு இந்த ஜோடி பறந்துள்ளது.
தொடர்ந்து விக்கி – நயன்தாரா ரொமான்டிக் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை ஆட்டம் காண வைத்தது. இப்படி இருக்கின்ற நிலையில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு விக்கி – நயன்தாரா இருவரும் தேசிய கொடியை கையில் ஏந்தி சுதந்திர தினத்தை சிறப்பித்தனர்.
புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அந்த ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர் மேலும் லைக்கைகளையும் கமெண்ட்களையும் அள்ளி வீசி அசத்தி வருகின்றனர் இதனால் விக்கி நயன்தாரா ஜோடி செம்ம சந்தோஷத்தில் இருந்து வருகிறது. இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..