விக்கி – நயன்தாரா கல்யாண ட்ரெஸ்ஸில் இப்படி ஒரு விஷயம் இருந்ததா.? வெளிவந்த ரகசியம்.!

viki and nayanthara
viki and nayanthara

தென்னிந்திய திரையுலகில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வரும் லேடி சூப்பர் ஸ்டார் மற்றும் இளம் இயக்குனர் விக்னேஷ் இருவரும் கடந்த 7 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் ஜூன் 9ஆம் தேதி கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் சினிமா பிரபலங்கள் உறவினர்கள் நண்பர்கள் என சிலர் மத்தியில் மிக சிறப்பாக திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணத்திற்கு ரஜினி, ஷாருக்கான், அட்லி, அனிருத், கார்த்தி, சூர்யா போன்ற பலரும் கலந்து கொண்ட நிலையில் ரஜினி திருமணத்தில் தாலி எடுத்துக் கொடுத்து சிறப்பித்துள்ளார்.

மேலும் நயன்தாராவிற்கு 30 சவரன் மதிப்புள்ள தங்க நகைகளை பரிசாக கொடுத்துள்ளார் எனவும் கூறப்படுகிறது. இவரைத் தொடர்ந்து மற்ற பல பிரபலங்களும் பல லட்சம் மதிப்புள்ள பரிசுகளை வழங்கி இருப்பார்கள் என தெரியவருகின்றது மேலும் திருமணத்தில் கலந்து கொண்ட பலருக்கும் விக்னேஷ் மற்றும் நயன்தாரா தங்க வெள்ளி காசுகளையும் அன்பளிப்பாக அளித்துள்ளனர்.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமணம் இந்து முறைப்படி பாரம்பரியமாக நடைபெற்றது. திருமணத்தில் ஒவ்வொரு விஷயமும் மிகச் சிறப்புடையதாக இருந்தது அந்தவகையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் திருமண உடைகள் மிக ஸ்பெஷலாக தயார் செய்யப்பட்டுள்ளது.

நயன்தாராவின் புடவையில் அவரது பெயரும் விக்னேஷ் சிவனின் பெயரும் ஹிந்தியில் பொறிக்கப்பட்டுள்ளது மேலும் திருமண தேதியுடன் சில அம்மன் சிலைகளும் பொறிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதை தவிர்த்து நயன்தாரா ஏழு அடுக்கு உள்ள வைர ஆரம் மற்றும் மரகதத்தால் ஆன சில   நகைகள் போன்றவற்றை அணிந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.