திருப்பதியில் நடக்க வேண்டிய விக்கி – நயன்தாரா கல்யாணம்.? இடம் மாறியதற்கு முழு காரணம் இதுதான்.!

nayanthara and vignesh
nayanthara and vignesh

தென்னிந்திய சினிமா உலகின் நம்பர்-1 நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா இவர் நடிக்க தொடங்கிய ஆரம்பத்திலேயே டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து மேலும் சோலோ திரைப்படங்களிலும் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை தக்க வைத்துக்கொண்டார். தற்போது நயன்தாரா.

தமிழை தாண்டி பாலிவுட்டில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நடித்து வருவதால் தனது சம்பளத்தையும் பல மடங்கு உயர்த்தி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு பக்கம் நயன்தாரா மற்ற நடிகைகளுக்கு இடம் கொடுக்காமல் நம்பர் 1 இடத்தை தக்க வைத்துக் கொண்டு வருகையில் மற்றொரு பக்கம் இளம் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார்.

இருவரும் ஒன்றாக ஊர் சுற்றி வாழ்க்கையை என்ஜாய் செய்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் ரசிகர்கள் பலரும் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்த்து வந்த நிலையில் சமீபத்தில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் திருமண தகவல் கசிந்துள்ளது அதன்படி வருகின்ற ஜூன் 9ஆம் தேதி இருவருக்கும் திருப்பதியில் கல்யாணம் என்ற தகவல்.

முதலில் வெளிவந்த நிலையில் பின்பு திருமண பத்திரிக்கையில் மகாபலிபுரத்தில் கல்யாணம் என வெளிவந்துள்ளது இதனால் திருப்பதியில் இருந்து கல்யாணத்தை மகாபலிபுரத்திற்கு மாற்றியது எதனால் என பலரும் குழம்பி வந்த நிலையில் அதற்கான காரணம் தற்போது கிடைத்துள்ளது.

அதன்படி திருப்பதியில் 150 நபருக்கு மேல் திருமணத்தில் கலந்துகொள்ள முடியாது என்ற காரணத்தினால் விருந்தினர்கள் மற்றும் உறவினர்களின் அதிகமாக கலந்து உள்ளதால் திருமண இடத்தை மாற்றி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. எனினும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் சினிமா பிரபலங்களின் மிக நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே திருமண அழைப்பிதழ் விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.