குழந்தை விஷயத்தை தள்ளி வைக்கும் விக்கி – நயன்தாரா.? புதிய முடிவு எடுத்த ஜோடி.! இதுதான் காரணமா..

viki and nayanthara
viki and nayanthara

தென்னிந்தியா சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இவர் சினிமா உலகில் பல வெற்றிகளை ருசித்தாலும் நிஜ வாழ்க்கையில் சில சங்கடங்களை தான் அதிகம் பார்த்தார் அதில் இருந்து அவரை கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு மாற்றியவர் விக்னேஷ் சிவன்.

நானும் ரவுடிதான் திரைப்படத்தில் பணியாற்றும் போது விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவும் நல்ல நண்பர்களாக மாறிய பின் காதல் வயப்பட்டனர் இருவரும் கடந்த ஏழு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் ஒரு வழியாக ஜூன் ஒன்பதாம் தேதி மகாபலிபுரத்தில் சினிமா பிரபலங்கள், உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் மிக பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு திருமணத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தாலி எடுத்துக் கொடுக்க அசத்தினார். திருமணம் முடிந்த கையோடு விக்கி – நயன்தாரா திருப்பதி, கேரளா இடங்களுக்கு சென்று வந்தனர் அதன் புகைப்படங்கள் தீயாய் பரவி வந்த நிலையில் திடீரென்று இரவோடு இரவாக தாய்லாந்து நாட்டிற்கு விக்கி – நயன்தாரா ஹனிமூன் சென்றனர் அங்கு நட்சத்திர ஹோட்டலில் இவர்கள் தொடர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வேற லெவலில் பேசப்பட்டது.

ஹனிமூன் முடிந்ததையோடு விக்கி – நயந்தாரா அடுத்தடுத்த சினிமா வேலைகளை பார்க்க இருக்கின்றனர் குறிப்பாக நயன்தாரா மலையாளத்தில் ஒரு படம், ஹிந்தியில் ஒரு படம், தமிழில் இரண்டு படம் என கைவசம் வைத்திருக்கிறார் இதனால் இந்த படங்களை முடித்துவிட்டு மிகப்பெரிய ஒரு ஹனிமூன் பிளான் பண்ண உள்ளதாக கூறப்படுகிறது அதேசமயம் விக்கி , நயன்தாரா இருவரும் புதிய முடிவையும் எடுத்துள்ளனர்.

தற்போது இருக்கும் படங்களை அனைத்தையும் முடித்துவிட்டு புதிய பட வாய்ப்பு கிடைத்தால் நடிக்கலாம் அப்படி இல்லை என்றால் குழந்தை பெற்று வாழ்க்கையை ஓட்டலாம் என முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது இதற்கு இரண்டு பேருமே ஓகே சொல்லி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.