கோலாகலமாக அரங்கேறி முடிந்த விக்கி – நயன்தாரா கல்யாணம்.! வீடியோவை பல கோடி கொடுத்து வாங்கிய NETFLIX எவ்வளவு தெரியுமா.?

viki-and-nayanthara
viki-and-nayanthara

தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் இறுதியாக..

ஜூன் 9ஆம் தேதி கோலாகலமாக மகாபலிபுரத்தில் திருமணம் வெற்றிகரமாக அரங்கேறியது இவர்களது திருமணத்திற்கு உறவினர்கள் நண்பர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலர் கலந்து கொண்டு அசத்தினர் விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமணத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

தாலியை எடுத்துக் கொடுத்தது இந்த கல்யாணத்தை சிறப்பாக பார்க்கப்படுகிறது. கல்யாணம் ஒரு பக்கம் ஜோராக அரங்கேற மறுபக்கம் ஆதரவற்ற முதியவர்கள் குழந்தைகள் என ஒரு லட்சம் பேருக்கு உணவு அளித்துள்ளனர். இந்த ஜோடி மேலும் திருமணத்திற்கு வந்த அனைத்து நபருக்கும் சிறப்பு பரிசு ஒன்றையும் கொடுத்து அழகு பார்த்து உள்ளது.

இந்த ஜோடி கல்யாணம் முடிந்த கையோடு விக்கி நயன்தாரா ஏழுமலையான் கோயிலுக்கு சென்று அங்கு தரிசனம் செய்துவிட்டு  வந்ததன் புகைப்படங்கள் கூட பெரிய அளவில் பேசப்பட்டது.  இது இப்படி இருக்கின்ற நிலையில் விக்கி நயன்தாரா திருமண வீடியோவை இயக்குனர் கௌதம் மேனன் இயக்கியிருந்தார்.

அந்த வீடியோவை நெட்பிளிக்ஸ் நிறுவனம் தற்போது வாங்கி இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது இந்த திருமணத்தின் மொத்த செலவையும் அவர்களே தான் ஏற்றுக் கொண்டார்களாம் அதன்படி பார்த்தால் இந்த ஜோடிக்கு சுமார் 25 கோடி கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.