அஜித்தை பழிக்கு பழி வாங்க விக்கி நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு.! இது எங்க போய் முடியப் போகுதோ…

ajith-ak62
ajith-ak62

இயக்குனர் விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவில் அறியப்படும் இயக்குனராக வலம் வருகிறார் இவர் முதன் முதலில் நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக உருமாறினார் அந்த திரைப்படத்தில் நயன்தாராவை வைத்து இயக்கினார். அதனால் நயன்தாராவின் நட்பு கிடைத்தது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது இவர்கள் இருவரும் ஏழு வருடங்களாக லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தார்கள்.

இந்த நிலையில் நீண்ட காலம் காதலித்து வந்த விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் தங்களுடைய காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள் அதனால் ஜூன் 9ஆம் தேதி மிகவும் பிரம்மாண்டமாக இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். லேடி சூப்பர் ஸ்டாரை தன்னுடைய மனைவியாக மாற்றிக் கொண்டார் பின் நாலு மாதம் கழித்து திடீரென அவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தை பிறந்தது.

இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது ஆனால் இவர்கள் வாடகை தாய் மூலம் தான் இரண்டு குழந்தையை பெற்றுக் கொண்டார்கள் நயன்தாரா விக்கி இருவரும் பல சர்ச்சைகளை சந்தித்து வந்த நிலையில் விக்னேஷ் அவர்களுக்கு நயன்தாரா சிபாரிசு செய்து ak 62 திரைப்படத்தினை இயக்கும் வாய்ப்பை பெற்றுக் கொடுத்தார். ஆனால் விக்கி அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.

கதையை எழுதாமல் விக்கி தன்னுடைய பர்சனல் வேலையை மட்டுமே பார்த்துக் கொண்டுள்ளார் அதனால் அஜித் மற்றும் லைக்கா கடும் கோபத்திற்கு ஆளானார் உடனே விக்கியை அஜித் 62 திரைப்படத்திலிருந்து நீக்கினார்கள். தன்னை திடீரென நீக்கி விட்டதால் மனம் நொந்து பல பதிவுகளை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வந்தார். தன் கணவரை தூக்கி அவர்களை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என மனைவி நயன்தாரா பல திட்டங்களை போட்டு வருகிறாராம்.

அந்த வகையில் மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஒரு கதையை எழுதி அதனை கன்பார்ம் செய்து நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார்கள், நயன்தாரா மற்றும் விக்கிக்காக விஜய் சேதுபதி இந்த திரைப்படத்தில் நடிக்க இருக்கிறாராம் இந்த திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக உருவாக இருக்கிறதாம். அதுமட்டுமில்லாமல் படத்தில் அபிஷேக் பச்சனை  நடிக்க வைக்க பல திட்டம் தீட்டி வருகிறாராம்.

இதற்காக பாலிவுட் எழுத்தாளர் ஒருவரை கதை எழுத கூப்பிட்டுள்ளார்கள் அதனால் தன் மனைவி நயன்தாரா மற்றும் தன்னுடைய இரட்டை  குழந்தைகளுடன் விக்கி மும்பை முகாம் இட்டுள்ளார். இந்த படத்தின் அதிகார பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை முடித்த பிறகு பிரதீப் ரங்க நாதனை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறார் விக்னேஷ் சிவன்.

தன்னை அவமானப் படுத்தியவர்களை பழிக்கு பழி வாங்கவே நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் உறுதிமொழி எடுத்து அதிரடியாக பல திட்டங்களை தீட்டி வருகிறார்கள்.