நயன்தாரா தமிழில் தொடர்ந்து நல்ல கதை அம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து மற்றும் சோலோ படங்களிலும் நடித்து தனது மார்க்கெட்டை பெரிய அளவில் உயர்த்திக்கொண்டு நம்பர் ஒன் நடிகையாக வலம் வருகிறார். சமீப காலமாக இவரது ஒவ்வொரு படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது சம்பளத்தையும் கணிசமாக ஏற்றி வருகிறார்.
அப்படி தமிழில் தற்போது இருக்கும் நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக நயன்தாரா பார்க்கப்படுகிறார். இப்படி சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வளம் வந்து கொண்டிருக்கும் நயன்தாராவிற்கு கடந்த மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் திருமணமாகியது.
இது ஒரு காதல் திருமணம் இருவரும் நீண்ட வருடங்களாக காதலித்து வந்த நிலையில் பலர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர் ஆனால் இவர்களது திருமணம் மிக கட்டுப்பாட்டுடன் நடந்ததால் அவர்களது புகைப்படம் வெளிவரவில்லை.
இந்த நிலையில் தொடர்ந்து திருமணம் ஆகி சில நாட்கள் தனது புது வாழ்க்கையை என்ஜாய் செய்துவிட்டு மீண்டும் படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார் நயன்தாரா. அப்படி தற்போது அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஹிந்தியில் உருவாகி வரும் ஜவான் படத்தின் படப்பிடிப்பில் நயன்தாரா கலந்து கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணம் முடிந்த கையோடு விக்னேஷ் சிவன் அவரது சோசியல் மீடியா பக்கத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருக்கும் ஒரு சில முக்கிய புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டு வந்த நிலையில் இன்றுடன் இவர்களுக்கு திருமணமாகி ஒரு மாதம் முடிவடைந்துள்ளது அதனை வெளிப்படுத்தும் வகையில் மன்த்லி ஆனிவர்சரி என பதிவிட்டு திருமணத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் நயன்தாரா மற்றும் விக்கியுடன் ரஜினி, ஷாருக்கான், அட்லி போன்ற பிரபலங்கள் இருக்கின்றனர் இதோ அந்த புகைப்படம்.