விமானத்தில் ரொமான்ஸ் பண்ணும் விக்கி – நயன்தாரா.! போட்டோவை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்.

nayanthara and vikki

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா சினிமா உலகில் பிரபல காதல் ஜோடிகளாக திகழ்ந்து வந்தனர் இருவரும் காதலிக்கும் போது பல இடங்களுக்கு ஒன்றாக ஊர் சுற்றி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் சிறந்த ஜோடிகளாக திகழ்ந்து வந்தனர்.  இவர்களுடைய ரொம்ப நெருங்கி இருக்கும் புகைப்படங்கள்..

பல வெளி வந்த வண்ணமே இருந்ததால் இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என ரசிகர்கள் மக்கள் பலரும் ஆவலாக எதிர்பார்த்தனர். ஒரு வழியாக விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஜூன் ஒன்பதாம் தேதி மகாபலிபுரத்தில் உறவினர்கள் நண்பர்கள் சினிமா வட்டாரங்கள் மத்தியில் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களது திருமணம் மிக கட்டுப்பாடுடன் நடந்திருந்தாலும் பிரம்மாண்டமாக அரங்கேறியது. திருமணத்தில் ஒவ்வொரு விஷயமும் அவ்வளவு அற்புதமாக இருந்தது என சொல்லப்பட்டது. திருமணம் முடிந்த கையோடு கேரளா திருப்பதி போன்ற இடங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு குட்டி ஹனிமூனாக தாய்லாந்து சென்றனர்.

அங்கும் இருவரும் பல ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டு சோசியல் மீடியாவை அதிரவைத்த நிலையில் படங்கள் பெண்டிங்கில் இருப்பதால் அதனை நினைத்து சில நாட்களிலேயே சென்னை திரும்பி படப்பிடிப்பில் கலந்து கொண்டு வந்தனர். தற்போது நயன்தாரா ஹிந்தியில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார்.

இயக்குனர் விக்னேஷ் சிவன் அண்மையில் சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியா போட்டியை ஏற்று சிறப்பாக நடத்தி முடித்துள்ளார். இப்படி இருக்கின்ற நிலையில் விக்கி மற்றும் நயன்தாரா இருவரும் ஓய்வெடுப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு பறந்து உள்ளனர். அப்போது விமானத்தில் விக்கி மற்றும் நயன்தாரா இருவரும் மிக ரொமான்டிக்காக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில இணையதள பக்கத்தில் கசிந்து வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

vikki and nayanthara
vikki and nayanthara
vikki and nayanthara