ஹனிமூனுக்கு ரெடியான விக்கி நயன்தாரா – எங்கே போகப் போறாங்க தெரியுமா.?

viki and nayanthara
viki and nayanthara

திரையுலகமே எதிர்பார்த்த விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் கல்யாணம் சமீபத்தில் கோலாகலமாக அரங்கேறியது. தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வரும் நயன்தாரா தொடர்ந்து நல்ல கதைகள் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகின்றனர்.

ஒரு கட்டத்தில் இளம் இயக்குனர் விக்னேஷ் சிவன் காத்துவாக்குல ரெண்டு காதல். படத்தின் கதையை பல நடிகர் நடிகைகளுக்கும் கூறி வந்த நிலையில் இந்த படத்தில் நடிக்க யாரும் முன்வராத பட்சத்தில் விக்னேஷ் சிவனிடம் எதைக்கண்டு மயங்கினார் என தெரியவில்லை நயன்தாரா விக்னேஷ் சிவன் சொன்ன கதைக்கு சம்மதம் சொல்லி உள்ளார்.

அதனை அடுத்து இந்த படத்தில் ஹீரோவாக விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடித்து படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து விக்னேஷ் சிவனுக்கு பேரையும் புகழையும் பெற்றுத் தந்தது. இந்த படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவனுக்கு பேரும் புகழும் ஒரு பக்கமிருக்க நயன்தாராவை திருமணம் செய்துகொள்ளும் அளவிற்கு இவர்களது உறவு மாறி உள்ளது.

அந்த வகையில் இந்த படத்திற்கு பின்பு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த 7 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்தில் முக்கிய உறவினர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

புதுமண தம்பதிகளான விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருமணம் முடிந்த கையோடு கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.  அப்படி தற்போது நயன்தாராவின் அம்மா வீட்டிற்காக கேரளா சென்றுள்ள விக்கி மற்றும் நயன்தாரா அடுத்ததாக ஹனிமூனுக்கு வெளிநாட்டிற்கு ஆளே இல்லாத இடத்திற்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன