ரொமான்டிக் லுக்கில் அசத்தும் விக்கி – நயன்தாரா.! புதிய புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளின் தூக்கத்தை கெடுக்கும் ஜோடி.!

nayathara

சினிமா உலகில் புதுமண தம்பதிகளாக நட்சத்திர ஜோடியாக வலம் வரும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்ததை எடுத்து பல புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெளியீட்டு ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகி வந்தனர்.

இப்படி காதல் ஜோடிகளாக சுற்றி வந்த விக்கி மற்றும் நயன்தாரா இருவரும் சமீபத்தில் நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் பிரபலங்கள் என சிலர் மத்தியில் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்தில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக காட்சி அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் முடிந்த கையோடு திருப்பதி கேரளா சென்று சாமி தரிசனம் செய்து முடித்துவிட்டு பின்பு தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்று அங்கு கொஞ்ச நாட்கள் நல்லா என்ஜாய் செய்து விட்டு மீண்டும் தமிழ்நாட்டிற்கு திரும்பி தற்போது படப்பிடிப்புகளில் பிஸியாக இருந்து வருகின்றன.

அந்த வகையில் நயன்தாரா அட்லீ இயக்கத்தில் உருவாக்கி வரும் ஜவான் படப்பிடிப்பு தளத்தில் கலந்து கொண்டு உள்ளார் என தெரிய வருகிறது. இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகும் விக்னேஷ் சிவன் நயன்தாராவுடன் இணைந்து பல புகை படங்களை வெளியிட்டு வந்த நிலையில் தற்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும்..

மிக நெருக்கமாக இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படத்தின் பின்னணியில் என்னையும் கூட்டிக் கொண்டு செல் என்ற வாக்கியம் இடம்பெற்றுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இந்த புகைப்படத்தை வெளியிட்டு நினைச்சா தோணும் இடமே என எழுதியுள்ளார். இது அந்த புகைப்படம்.

vikki and nayanthara
vikki and nayanthara
vikki and nayanthara