தென்னிந்திய சினிமா உலகில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா இவரை மக்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் செல்லமாக லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுவது வழக்கம். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த ஏழு வருடங்களாக விக்னேஷ் சிவனை காதலித்து வந்த நிலையில் ஒரு வழியாக கடந்த ஜூன் ஒன்பதாம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ஒரு கடற்கரை ஓரத்தில் தங்கும் விடுதியில் இவர்களது திருமணம் அரங்கேறியது.
இவர்களது திருமணத்திற்கு சினிமா பிரபலங்கள் நண்பர்கள் உறவினர்கள் என பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த ஜோடிக்கு தாலி எடுத்து கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணம் முடிந்த கையோடு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திருப்பதி கேரளா என சுற்றி திரிந்தனர்.
ஒரு கட்டத்தில் இரவோடு இரவாக தாய்லாந்து நாட்டிற்கு ஹனிமூனுக்காக சென்றனர். அங்கு இவர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அசத்தி வந்தனர். இருப்பினும் நயன்தாரா பல்வேறு புதிய படங்களில் கமிட் ஆகி இருந்ததால் சீக்கிரமாகவே வந்து விட்டனர். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஜவான் படத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
அதை முடித்துவிட்டு கனெக்ட் கோல்ட் போன்ற படங்களிலும் நடிப்பார் என தெரிய வருகிறது இது இப்படி இருக்க கணவனை பிரிய முடியாமல் இருவரும் அவ்வப்போது சந்தித்து கொள்கின்றனர். இவர்கள் இருவரும் சந்திக்கும் பொழுது நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் எடுக்கப்படுகின்றன.
அப்படி அண்மையில் நயன்தாரா ஷர்ட் போட்டுக் கொண்டு விக்னேஷ் சிவனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வேற லெவலில் வைரலானது தற்பொழுதும் கூட படங்களில் எடுக்கும் ரொமான்டிக் சீன்களையே தோற்கடிக்கும் அளவிற்கு நயன்தாரா கடற்கரை ஓரத்தில் ரொமான்ஸ் பண்ணும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில இணையதளத்தை ஆட்டம் காண வைத்துள்ளது இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.