ரொமான்டிக் லுக்கில் அசத்தும் விக்கி – நயன்தாரா – லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து குதூகலம் அடையும் ரசிகர்கள்.!

nayanthara

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து தன்னை மிகப் பெரிய அளவில் பிரபலப்படுத்திக் கொண்டவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. சினிமாவில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த இவர் நிஜ வாழ்க்கையில் இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்த நிலையில் ஒரு வழியாக மகாபலிபுரத்தில் கோலாகலமாக இவர்களது திருமணம் முடிந்தது.

திருமணத்திற்கு நண்பர்கள் உறவினர்கள் சினிமா பிரபலங்கள்  என பலர் வந்து வாழ்த்தினர் திருமணம் முடிந்த கையோடு விக்கி நயன்தாரா ஜோடி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தனர் அதன் பிறகு உடனடியாக விக்னேஷ் சிவன் நயன்தாரா கேரளா சென்றனர் மேலும் சின்னதாக ஒரு ஹனிமூனிற்காக தாய்லாந்து சென்றது இந்த ஜோடி.

அதன் புகைப்படங்கள் கூட வெளிவந்து ரசிகர்களை கவர்ந்து இழுத்தது. ஹனிமூன் முடித்துவிட்டு வந்த நயன்தாரா தற்பொழுது படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். முதலாவதாக அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படத்தில் ஹீரோயினாக இவர் நடிப்பதால் தற்பொழுது மும்பையில் தங்கி நடித்து வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து கனெக்ட், கோல்ட் ஆகிய திரைப்படங்களிலும் நயன்தாரா நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தனது மனைவியை விடாமல் விக்னேஷ் சிவன் பின் தொடர்ந்து போய்க்கொண்டே இருக்கிறாராம் சொல்லப்போனால் ஜவான் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நயன்தாராவுடன் மீதி நேரங்களில் விக்னேஷ் சிவன் சுற்றித்திரிந்து வருகிறார்.

அதன் புகைப்படங்கள் கூட அவ்வபொழுது வெளியிடபடுகின்றன. அதுபோல தற்போது விக்னேஷ் சிவன் தனது மனைவி உடன் ரொம்ப நெருக்கமாக இருக்கும்  ரொமான்டிக் புகைப்படங்கள் சில எடுத்துக்கொண்டார். அது தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

vikki and nayanthara
vikki and nayanthara