நம்ப வச்சு ஏமாற்றிய விக்கி – நயந்தாரா ஜோடி.. மீடியோ முன்பு மொத்த உண்மையையும் போட்டு உடைத்த ஜி பி முத்து

nayanthara
nayanthara

சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் நுழைய முடியாத திறைமையான ஆட்கள் டிக் டாக் போன்ற புதிய செயலிகளை பயன்படுத்தி தனது திறமையை வெளிக்காட்டி மக்கள் மனதில் இடம் பிடிக்கின்றனர் அந்த வகையில் ஜிபி முத்து. டிக் டாக், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் தனது வீடியோவை வெளியிட்டு பிரபலமடைந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்பொழுது youtube சேனல் ஒன்றை ஆரம்பித்து பெரிய அளவில் பிரபலம் அடைந்து வருகிறார். இதனை பார்த்த மீடியா உலகம் ஜிபி முத்துக்கு வாய்ப்புகளைப் கொடுத்து வருகிறது. முதல்வதாக படத்தின் ப்ரோமோஷன்காக ஜி பி முத்துவை பலரும் பயன்படுத்தி உள்ளனர் அந்த வகையில் சமீபத்தில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவான லவ் டுடே படத்தின் பிரமோஷன் காக கலந்து கொண்டார்.

மேலும் சசிகுமார் அவருடைய படத்தின் ப்ரோமோஷன்காகவும் ஜி பி முத்துவை சந்தித்து பேசி இருக்கிறார் என கூறப்படுகிறது. இது தவிர பல்வேறு டாப் நடிகரின் படங்களிலும் கமிட் ஆகியுள்ளார் அந்த வகையில் அஜித்தின் 62 ஆவது திரைப்படத்தில் ஜிபி முத்து நடிகை இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன இப்படி இருக்கின்ற நிலையில் விக்னேஷ் சிவன், நயன்தாரா தயாரிப்பில் உருவான கனெக்ட் திரைப்படம்..

வெகு விரைவிலேயே திரையில் வரவுள்ளது இந்த நிலையில் பிரிமியர் ஷோ ஒன்றை சமீபத்தில் போடப்பட்டது அதற்கு நயன்தாரா, விக்னேஷ் சிவன் என பலரும் வந்தனர் அப்பொழுது ஜிபி முத்துவையும் அழைத்துள்ளனர். அதுவும் அவர்கள் எப்படி அழைத்தார்கள் என்றால் நீங்கள் நயன்தாரா பக்கத்தில் உட்கார்ந்து படம் பார்க்கலாம் என சொல்லி உள்ளனர்.

ஆனால் திரையரங்கு உள்ளே போனதும் ஜி பி முத்துவை ஒரு ஓரத்தில் உட்கார வைத்து விட்டார்களாம் இதனால் கடுப்பான அவர் பாதியிலேயே எழுந்து விழுந்து விட்டார் வெளியே வந்த அவர் மீடியா முன்பு உண்மையை உடைத்து விட்டார் அவர் சொன்னது என்னவென்றால்..   நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார்கள் என்றும் இதனால் பாதியிலேயே வெளியே எழுந்து வந்து விட்டேன் என கூறியுள்ளார்.