ஷாப்பிங் மாலில் வலம் வரும் விக்கி – நயன்தாரா ஜோடி.! ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் புகைப்படம்.

nayanthara

தமிழ் சினிமாவில் தொடர்ந்து டாப் நடிகர்கள் மற்றும் முக்கிய கதை அம்சம் வரும் கதைகளை தேர்வு செய்து நடித்து ரசிகர்கள் மத்தியிலும் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்து நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. சினிமாவில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பது அவ்வளவு எளிதல்ல..

ஏன் என்றால் அவரை தொடர்ந்து பல நடிகைகள் அந்த இடத்திற்கு போட்டி போட்டு வருவார்கள். அதற்கு இடம் கொடுக்காமல் தொடர்ந்து சினிமாவில் முன்னேறிக்கொண்டே இருந்தால் தான் அந்த இடம் நிரந்தரமாக இருக்கும். அதனை தமிழ் சினிமாவில் நயன்தாரா சரியாக செய்து வருகிறார். இருந்தாலும் இவரது ரசிகர்கள் நயன்தாராவிற்கு வயது ஆகி கொண்டே செல்கிறது.

இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லையே என்ற கவலை இருந்தது. அந்த கவலையை போக்கும் வகையில் ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி நயன்தாரா திருமணம் செய்து கொண்டார். ஆம் இளம் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் கடந்த ஆறு ஏழு வருடங்களாக காதலித்து வந்தனர். ஒருவழியாக தற்போது திருமணம் செய்து கொண்டு குடும்பம் மற்றும் சினிமா என இரண்டையும் சரியாக நடத்தி என்ஜாய் செய்து வருகின்றனர்.

திருமணம் முடிந்த கையோடு விக்கி மற்றும் நயன்தாரா தாய்லாந்துக்கு குட்டி ஹனிமூன் சென்றிருந்தனர். சில நாட்களிலேயே சென்னை திரும்பி அவர்களது வேலையில் கவனம் செலுத்தி வந்த நிலையில் மீண்டும் சிறு இடைவேளை காரணமாக ஸ்பெயின் நாட்டிலுள்ள பார்சிலோனா நகரத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

அங்கு அவர்கள் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது நயன்தாரா பார்சிலோனோ நகரத்தில் உள்ள ஒரு மாலில் கணவர் விக்னேஷ் சிவனுக்காக ஷாப்பிங் செய்து வருகிறார். அதனை வீடியோவாக எடுத்து விக்கி சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

nayanthara
nayanthara
nayanthara