விக்கி – நயன்தாரா கல்யாணத்தைப் பார்க்க வந்தவர்களுக்கு கிப்ட் அசத்திய ஜோடி.! என்ன தெரியுமா.?

nayanthara
nayanthara

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.  இவர் ஆறு வருடங்களுக்கு மேலாக தனது காதலன் விக்னேஷ் சிவனை காதலித்து வந்த நிலையில் ஒரு வழியாக ஜூன் 9ஆம் தேதியில் திருமணம் செய்து கொண்டார். நயன்தாரா மணப்பெண் கோலத்தில் அப்படியே தேவதைபோல் ஜொலித்தார்.

அவர் அணிந்திருந்த உடை மாற்றும் நகை போன்றவை கண்ணை பறித்தன. விக்னேஷ் சிவனும் பட்டு வேட்டி சட்டையில் செம்ம அழகாக இருந்தார். இவர்களது திருமணம் கோலாகலமாக செட் அமைக்கப்பட்டு உரிய பாதுகாப்புடன் அரங்கேறியது இதில் சினிமா பிரபலங்கள் விக்கி – நயன்தாரா உறவினர்கள், நண்பர்கள் என பலர் கலந்துகொண்டு திருமண விழாவை சிறப்பாகினர்.

குறிப்பாக சினிமா பிரபலங்கள் ஷாருக்கான், ரஜினி, கார்த்தி, சூர்யா, அஜித்தின் குடும்பம் என பலர் கலந்து கொண்டனர். இவர்களது திருமண நாளை ஒட்டி விக்கி – நயன்தாரா ஆதரவற்ற குழந்தைகள், முதியவர்கள் என ஒரு லட்சம் பேருக்கு உணவு அளித்து அசத்தினர்.

வெற்றிகரமாக திருமணம் அரங்கேறி முடிந்தது இது முடித்த கையோடு விக்கி நயன்தாரா உடனடியாக திருப்பதி ஏழுமலையானை சந்தித்து தரிசனம் செய்தனர் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் பகிரப்பட்டு வருகிறது. இப்படி திருமணம், திருப்பதி என சுற்றிக்கொண்டே இருக்கிறார்கள்.

vignesh shivan and nayanthara
vignesh shivan and nayanthara

இவர்களது கல்யாண செலவு மட்டுமே மிகப்பெரிய அளவிலானது இதோடு மட்டுமல்லாமல் விக்கி நயன்தாரா கல்யாணத்திற்கு வருகை தந்த உறவினர்கள், நண்பர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் பரிசு பொருளும் கொடுக்கப்பட்டது அதுவும் வெள்ளி மற்றும் தங்கத்தால் ஆன சில பொருள்கள் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவருகின்றன.