பணத்தாசையால் திருமணத்தைக் கூட வியாபாரமாக பார்க்கும் விக்கி நயன் ஜோடி.! அடக்கடவுளே என்ன இப்படி செய்துட்டாங்க.!

viknesh sivan
viknesh sivan

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் இவர்கள் கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக காதலித்து வருகிறார்கள் போட போடி என்ற சிம்புவின் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இவரின் முதல் திரைப்படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றாலும் அடுத்தடுத்து பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தார்.

பிறகு நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகியோர்களை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது மேலும் இடைப்பட்ட காலத்தில் விக்னேஷ் சிவன் பட வாய்ப்பு இல்லாமல் படத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தின் மூலம் காதலிக்க தொடங்கினார்கள்.

படவாய்ப்பு இல்லாத நேரத்தில் நயன்தாராவுக்கு பாடிகாட் மேனேஜர் உதவியாளர் என அனைத்துமே விக்னேஷ் சிவன் தான் விக்னேஷ் சிவன் சம்மதமில்லாமல் நயன்தாராவை நெருங்கக் கூட முடியாது அந்த அளவு விக்னேஷ் சிவன் நயன்தாரா உடன் நெருக்கமாக இருந்தார் ஒரு காலகட்டத்தில் யாராலும் நயன்தாராவை பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது அந்த நேரத்தில் விக்னேஷ் சிவன் நயன்தாரா ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டுமென்றால் தயாரிப்பாளர்களிடம் கமிஷன் பெற்றுக்கொண்டு தான் வந்தாராம் எனக் கூறப்படுகிறது.

தொடர்ந்து ஏழு வருடங்களாக கோவில் கோவிலாக சுற்றும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் எப்பொழுது திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என பலரும் கேள்வி எழுப்பினார்கள் இந்த நிலையில் இந்த ஜோடி வருகின்ற 9ஆம் தேதி திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக உறுதியான தகவல் வெளியானது மேலும் இந்த திருமணத்தை திருப்பதியில் நடத்த இருவரும் திட்டமிட்டார்கள். திருப்பதியில் எங்கே தாலி கட்டுவது எங்கே வரவேற்பு நிகழ்ச்சிகளை நடத்துவது என பார்வையிட்டு வந்தார்கள்.

அதற்காக சினிமா ஆர்ட் ஒருவரை  அழைப்பு செட் அமைக்கும் பணிகளையும் தொடங்கினார்கள். ஆனால் இதற்கிடையில்  நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரின் திருமணத்தை தெரிந்து கொண்ட பிரபல ott நிறுவனம் உங்களுக்குப் பெரும் தொகையை தருகிறோம்.  ஆனால் உங்கள் திருமணத்தை பிரமாண்டமாக நாங்கள் நடத்துகிறோம் திருப்பதியில் நடத்த முடியாது அதற்காக மகாபலிபுரத்தில் ஒரு மிகப்பெரிய செட் அமைத்து உங்கள் திருமணத்திற்காக அனைத்து ஏற்பாடுகளையும் நாங்கள் செய்கிறோம்.

இந்த திருமணத்தை ott இணையதளத்தில் ஒளிபரப்புவதற்கு மிகப் பெரிய தொகையையும் தருகிறோம் என அந்த நிறுவனம் நயன்தாரா மற்றும் விக்கி ஜோடிக்கு கூறியுள்ளது.  உடனே அதிக பணம் வருவதை தெரிந்து கொண்டு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருப்பதியில் திருமணத்தை நடத்தும் திட்டத்தை கைவிட்டுவிட்டு பிரபல OTT நிறுவனத்திடம் ஒப்பந்தம் போட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

என்னதான் சினிமாவில் கோடி கோடியாக சம்பாதித்தாலும் இன்னும் பணத்தாசை அவர்களுக்குள் அடங்கவில்லை என பலரும் அவரை கலாய்த்து தள்ளுகிறார். திருமணத்தைக் கூட விலை பேசி விற்று விட்டீர்களே எனவும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.