தென்னிந்திய சினிமா உலகில் பிரபல நட்சத்திர ஜோடிகளாக திகழ்ந்து வந்தவர்கள் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா. இருவரும் ஆறு ஏழு வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்த நிலையில் ஒரு வழியாக கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்தில் முக்கிய சில பிரபலங்களே கலந்து கொண்டிருந்தாலும் திருமணம் மிக விமர்சியாக நடைபெற்றது.
கல்யாணத்தில் ஒவ்வொரு விஷயமும் மிக பாரம்பரியமாக அரங்கேறியது. விக்னேஷ் சிவனுக்கு ரஜினி தாலி எடுத்துக் கொடுத்து கல்யாணத்தை நடத்தி வைத்தார். திருமணம் முடிந்த கையோடு விக்கி மற்றும் நயன்தாரா இருவரும் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து முடித்துவிட்டு ஹனிமூன் இருக்காக தாய்லாந்து சென்றனர்.
அப்போது இவர்கள் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேற லெவல் வைரல் ஆகியது. சில நாட்கள் மட்டும் தாய்லாந்தில் ரெஸ்ட் எடுத்துவிட்டு மீண்டும் வீடு திரும்பி நயன்தாரா படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வந்தார் விக்னேஷ் செஸ் ஒலிம்பியா போட்டியின் பொறுப்பை ஏற்று நடத்தி வைத்தார். இதை வெற்றிகரமாக முடித்துவிட்டு விக்னேஷ் சிவனும், நயன்தாராவும்..
மீண்டும் சிறிய இடைவேளை காரணமாக ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளனர். அங்கும் இவர்கள் அடிக்கும் டூட்டி கொஞ்சம் நெஞ்சம் அல்ல. தினமும் விக்கி மற்றும் நயன்தாராவின் ரொமான்டிக் புகைப்படங்கள் வெளியாகிய வண்ணமே இருக்கின்றன. தற்போது இருவரும் ஐபிஜா தீவிற்கும் சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு வடமுனையில் அமைந்துள்ள..
பிரபல ஐந்து நட்சத்திர விடுதியான சிக்ஸ்த் சென்ஸ்சில் தங்கியுள்ளனர். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இந்த சிக்ஸ்த் சென்ஸ் விடுதியில் ஒரு நாள் தங்குவதற்கு மட்டுமே வாடகையாக இந்திய பணம் மதிப்பில் 45 ஆயிரம் ஆகுமாம். இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.