ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவளித்த விக்கி – நயன்தாரா.! எத்தனை ஆயிரம் பேருக்கு தெரியுமா.?

viknesh sivan nayanthara
viknesh sivan nayanthara

சினிமா பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பலரும் எதிர்பார்த்த இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் திருமணம் இன்று நடைபெற உள்ளது தென்னிந்திய சினிமாவில் நம்பர் 1 நடிகையாக வலம் வரும் நயன்தாரா தொடர்ந்து பட வாய்ப்புகளை கைப்பற்றி டாப் ஹீரோக்களுடன் நடித்து தனக்கான நம்பர் 1 இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

இப்படி சினிமாவில் விடா முயற்சியாக ஓடிக்கொண்டிருந்த நயன்தாரா ஒரு கட்டத்தில் நானும் ரவுடிதான் திரைப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து பணியாற்றியதன் மூலம் இருவருக்கும் காதல் மலர்ந்தது அதனை வெளிப்படுத்தும் வகையில் சோஷியல் மீடியாவில் இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகி வந்தனர்.

இதனிடையில் கடந்த 7 வருடங்களுக்கு மேலாக காதலித்து வரும் விக்னேஷ் சிவன்  மற்றும் நயன்தாராவிற்கும் இன்று மகாபலிபுரத்தில் உள்ள ரெஸ்டாரன்ட் ஒன்றில் கோலாகலமாக திருமணம் நடைபெற உள்ளது. திருமணத்தில் அஜித், விஜய், தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், சிவகார்த்திகேயன், ரஜினி போன்ற முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்களது திருமணத்திற்காக கண்ணாடி செட்டு அமைக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியது. மேலும் திருமணத்திற்கு பலத்த பாதுகாப்புகளுடன் ஏற்பாடு நடந்து வருகிறது. இவர்களது திருமணத்தை ஓடிடி இணையதளத்தில் வெளியிடவும் தயாராகி வருகின்றன .

இந்த நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமணத்தில் ரசிகர்கள் கலந்து கொள்ளாதது சற்று வருத்தமடைய செய்கிறது. அதற்காக நயன்தாரா 20 ஆயிரம் ஆதரவற்ற குழந்தைகளுக்கு மதிய விருந்து அளிக்க ஏற்பாடு செய்துள்ளார் இதனால் ரசிகர்கள் மற்றும் மக்கள் என பலரும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை வாழ்த்தி வருகின்றனர்.