தீபாவளியை முன்னிட்டு தனது இரண்டு குழந்தைகளை வெளி உலகத்திற்கு காட்டிய விக்கி மற்றும் நயன்தாரா..! கியூட் புகைப்படம் இதோ..

vikki and nayanthara

தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தமிழ் சினிமா உலகில் நம்பர் ஒன் ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது தமிழில்  லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா  ரஜினி, அஜித், விஜய், சூர்யா, தனுஷ், விக்ரம், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் போன்ற டாப் ஹீரோகள் படங்களில் நடித்து ஓடிக்கொண்டிருக்கிறார்.

மேலும் சோலோ படங்களில் நடிப்பதால் இவரது மார்க்கெட் குறையாமல் அதிகரிக்க வண்ணமே இருக்கிறது சினிமா உலகில் வெற்றியை கண்டு வந்த இவர் நானும் ரவுடிதான் திரைப்படத்தின் போது இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது காதல் வயப்பட்டார் பின் இருவரும்  ஏழு வருடங்கள் காதலித்து வந்த நிலையில் ஒரு வழியாக கடந்த ஜூன் ஒன்பதாம் தேதி முறைப்படி..

உறவினர்கள், நண்பர்கள், சினிமா பிரபலங்கள் என அனைவரது முன்னிலையிலும்  திருமணம் செய்து கொண்டனர் அதன் பிறகு இந்த ஜோடி பட ஷூட்டிங்கிற்கு என ஒரு நேரத்தை ஒதுக்கி  சீக்கிரம் முடித்துவிட்டு மீதி நேரங்களில் வாழ்க்கையை என்ஜாய் பண்ணி வாழ்ந்து வருகின்றனர் அதனால் இருவரும் செம்ம சந்தோஷத்துடன் இருக்கின்றனர்.

அண்மையில் இந்த ஜோடி வாடகை தாயின் மூலம் இரண்டு குழந்தைகளை பெற்று எடுத்ததாக ஒரு தகவல் வெளியானது. விக்கி – நயன்தாரா இரண்டு குழந்தைகளின் புகைப்படங்கள் வைரலாகி வந்த நிலையில் தற்போது தீபாவளியை முன்னிட்டு விக்கி மற்றும் நயன்தாரா குழந்தைகளுடன் போஸ் கொடுத்துள்ளனர்.

அந்த புகைப்படங்கள் தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் தீபாவளியை குழந்தைகளுடன் கொண்டாடியது சூப்பர் என கூறி வாழ்த்தி வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..

vikki and nayanthara
vikki and nayanthara