அட்ஜஸ்ட்மெண்டா.. ஒரு புத்தகமே எழுதலாம் பிக் பாஸ் 7 வீட்டிற்கு போவதற்கு முன்பு விசித்திரா சொன்னா அதிர்ச்சி தகவல்.!

vichithra bigg boss season 7
vichithra bigg boss season 7

vichithra : பிரபல முன்னணி கவர்ச்சி நடிகையாவும் காமெடி நடிகையாகவும் வளம் வருபவர் விசித்ரா இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அதனைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக் பாஸ் ஏழாவது சீசனிலும் கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்கு செல்லும் இவர் முன்பு ஒரு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் அந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.

அதில் அவர் கூறியதாவது  ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் நடிப்பதற்கு முன்பு எனக்கு மெச்சூரிட்டியே கிடையாது, சும்மா திரையரங்கில் போய் பார்க்கும் பொழுது தான் நான் வரும் காட்சிகளுக்கு விசிலும் கைத்தட்டலும் இருந்தது. மற்றபடி என்னுடைய கதாபாத்திரம் என்ன நான் பேசிய வசனம் என்ன அது நல்ல கதாபாத்திரமா இல்லையா என்று கூட எனக்கு தெரியாது.

அதுமட்டுமில்லாமல் பதினைந்து வயதுக்கு அதிகமான கதாபாத்திரத்தில் கூட நான் நடித்துள்ளேன் அவங்க என்ன சொல்றாங்களோ அதைத்தான் நான் செய்வேன் மத்தபடி எனக்கு எதுவுமே தெரியாது ஆனால் என்னுடைய வாழ்க்கை இப்படி மாறும் என்பது எனக்கு கொஞ்சம் கூட தெரியாது. என்னுடைய உடை உயரம் எடை என அனைத்தையும் பயன்படுத்திக் கொண்டது சினிமா.

சினிமாவில் எத்தனையோ முன்னணி நடிகைகள் கவர்ச்சி காட்டி நடிக்கிறார்கள் ஆனால் என்னை மட்டும் ஏன் கவர்ச்சிக்காக மட்டும் அடையாளம் படுத்துகிறார்கள். இப்பொழுது மட்டும் நான் இருந்திருந்தால் தமன்னாவையே தூக்கி சாப்பிட்டு இருப்பேன் என் கிரகம் 20 வருடத்திற்கு முன்பே நான் வந்து விட்டேன் கவர்ச்சிக்கும் ஆபாசத்திற்கும் நடுவில் தான் என்னுடைய நடிப்பு இருந்தது.

அதேபோல் என்னுடைய நடிப்பு அனைவருக்கும் வராது நான் நன்கு நடனமாடுவேன் அதனால எனக்கு பாடல் கிடைத்தது இப்பொழுது உள்ள நடிகைகளுக்கு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்கிறாங்க ஆனால் அப்பொழுது உள்ள நடிகைகளுக்கு தங்கை வேடத்தில் நடித்தால் தங்கவேடம் மட்டுமே தான் தருவாங்க

அதேபோல் என்னுடைய காலத்தில் அட்ஜஸ்ட்மென்ட் இருந்ததா என்று கேட்டால் ஒரு டைரி வேண்டும் அத்தனை பெயர்களை எழுதலாம் அவர்களிடம் எல்லாம் போய் கேட்டுக் கொண்டு வர முடியுமா  தேவையில்லாத வேலை மீ டு பேசியவர்கள் இப்பொழுது எங்கே இருக்கிறார்கள். பேட்டியில் பேசியவர்களுக்கு நான்கு படம் எக்ஸ்ட்ரா கிடைக்கிறதா என்ன. முடிந்தால் இரு இல்லை என்றால் எதிர்கொள். அப்புறம் எதுக்கு சினிமாவில் இருக்கிறீங்க. இவன் என்ன கூப்பிட்டான் என்னால போக முடியல என்று சொல்லும் நடிகைகளை பார்த்தால்  ரசிக்கும்படி இல்லை.

ஒரு ஷூட்டிங் போன இடத்தில் ஒரு ஹோட்டலில் தங்கி இருந்த நான் அந்த ஹோட்டல் உரிமையாளரை காதலித்து கல்யாணம் பண்ணிக்கிட்டேன் அப்பொழுது அவருக்கு என்னுடைய படங்கள் பற்றி எதுவும் தெரியாது அதன் பிறகு படத்தை பார்த்து தான் அதிர்ச்சி அடைந்தார் என அந்த பேட்டியில் கூறியிருந்தார்.