வேட்டையன் திரைப்படம் திரையரங்கில் சக்கை போடு போட்டு வருகிறது இந்த நிலையில் ஓ டி டி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஜெய் பீம் என்ற திரைப்படத்தை இயக்கி ஞானவேல் ராஜா தமிழ் சினிமாவில் நல்ல ஒரு இடத்தை பிடித்துள்ளார் இதனை தொடர்ந்து அவர் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படம் அக்டோபர் பத்தாம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
வேட்டையன் திரைப்படம் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளாவில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது விஜய்யின் கோட் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலை முறியடிக்க வில்லை என்றாலும் மிகப்பெரிய வசூலை பெற்றுள்ளது என கூறப்படுகிறது. அதாவது இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது ரஜினியின் வேட்டையன்.
ரஜினியின் மாஸ் நடிப்பு ஞானவேல் ராஜாவின் கருத்து பகத்பாஸில் ஒன்லைன் காமெடி என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இந்த நிலையில் வேட்டையன் திரைப்படத்தின் OTT உரிமையை எந்த நிறுவனம் வாங்கியுள்ளது எவ்வளவு விலை கொடுத்துள்ளது என்பதை தற்போது பார்க்கலாம்.
தற்பொழுது கிடைத்துள்ள தகவலின் படி ரஜினி திரைப்படங்களை பெரும்பாலும் அமேசான் நிறுவனம்தான் வாங்கி வருகிறது அந்த வகையில் ஜெயிலர் திரைப்படத்தை அமேசான் நிறுவனம் வாங்கி வெளியிட்டது அதனால் அதிக லாபத்தை பெற்றது அப்படி இந்த வரியில் ுது ரஜினி நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படத்தையும் அமேசான் நிறுவனம் வாங்கியுள்ளது.
வேட்டையன் திரைப்படத்தை 90 கோடி கொடுத்து அமேசான் நிறுவனம் கைப்பற்றியுள்ளது இந்த திரைப்படத்தை நான்கு வாரங்களில் அமேசான் நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது அந்த வகையில் நவம்பர் 8ஆம் தேதி தான் அமேசான் பிரைம் வேட்டையன் திரைப்படத்தை வெளியிட இருக்கிறது என கூறப்படுகிறது.