வேட்டையன் தமிழகத்தில் மட்டும் இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா.?

இந்த வருடம் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில்  ரஜினியின் வேட்டையின் திரைப்படமும் ஒன்று இந்த திரைப்படத்தில் பகத் பாஸில் மஞ்சு வாரியார் ரித்திகா சிங் ஆகியவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

படத்தை ஞானவேல் ராஜா இயக்கியிருந்தார் இதற்கு முன்பு ஞானவேல் ராஜா ஜெய் பீம் என்ற திரைப்படத்தை இயக்கி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார் அதனால் இந்த திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

வேட்டையன் திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது இந்த நிலையில் தமிழகத்தில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் தற்பொழுது கிடைத்துள்ளது உலக அளவில் இந்த திரைப்படம் 220 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது என தகவல் ஏற்கனவே வெளியான நிலையில் தமிழகத்தில் ஏழு நாள் முடிவில் வசூல் விவரம் இதோ.

தமிழகத்தில் ஏழு நாள் முடிவில் 89 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது இன்னும் விரைவில் 100 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது வேட்டையன் படத்தில் பகத் பாசில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.