லைக்கா தயாரிப்பில் ஞானவேல் ராஜா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள திரைப்படம் வேட்டையன். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது படத்தில் பகத் பாசில் மஞ்சு வாரியர் ரித்திகா சிங் ஆகியோர்கள் நடித்துள்ளார்கள்.
வேட்டையன் திரைப்படத்தில் பகத் பாஸில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிபடுத்தினார் தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி எப்படி முன்னணி நடிகர்களுடன் நடித்து தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டாரோ அவரைப் போலவே மலையாள நடிகர்
பகத் பாஸில் பல படங்களில் நடித்த அசத்தி வருகிறார்.
விக்ரம், மாமன்னன் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து வேட்டையின் திரைப்படத்திலும் மிரட்டியுள்ளார் அதனால் இவர் பாலிவுட்டுக்கு சென்றால் சிறப்பான வரவேற்பு கிடைக்கும் என கூறுகிறார்கள்.
வேட்டையன் திரைப்படத்தில் ஹார்லிக்ஸ் அப்படியே சாப்பிடுவேன் என்பதில் ஆரம்பித்து துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பெண்களிடம் கடலை போட்டு தனக்கு தேவையான விஷயங்களை சாதித்துக் கொள்ளும் இடங்களிலும் ஒன்லைன் காமெடி மூலம் படத்தை பார்க்க வைத்து ரசிகர்களை ரசிக்க வைத்து விடுகிறார்.
ஆனால் கிளைமாக்ஸ் காட்சியில் பேட்டரிக்கு ஏற்பும் த ிஷயம் ரசிகர்களை திரையர்கில் அதிர்ச்சி அடைய செய்துள்ளது அதன் பிறகு வரும் காட்சிகள் விமர்சனங்களை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் ரஜினிகாந்த் மற்றும் பகத் பாஸில் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.
மேலும் தன்னுடன் பேட்டரி வேலை செய்ய வேண்டாம் அவருடைய உயிருக்கு ரிஸ்க் இருக்கும் என ரஜினிகாந்த் எச்சரிக்க உங்ககிட்ட வேலை செய்யவில்லை என்றால் திருடனாகவே மாறிவிடுவேன் என பேட்டரி கூறுவார் நல்லா நடிக்கிற பேட்டரி என ரஜினிகாந்த் பகத் பாசிலை பார்த்து கலாய்க்க உங்களை விடவா என பதிலுக்கு ரஜினியை பார்த்து பகத் பாஸில் கலாய்ப்பார் இந்த காட்சி தான் டெலிட் செய்யப்பட்ட காட்சி.
https://twitter.com/LycaProductions/status/1846076131012657475?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1846076131012657475%7Ctwgr%5E4496a41c61248c45be0bd7425dbcd792e3f225c4%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftamil.filmibeat.com%2Fnews%2Fvettaiyan-deleted-scene-shows-rajinikanth-and-fahadh-faasil-superb-fun-and-chemistry-144051.html