ஜெய் பீம் ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்துள்ள வேட்டையன் வரும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகிறது. லைக்கா தயாரித்திருக்கும் இப்படத்தில் அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர் உட்பட ஏராளமான பிரபலங்கள் நடித்திருக்கின்றனர்.
இதுவே ஆர்வத்தை ஏற்படுத்தி இருந்தது. அதேபோல் கடந்த சில நாட்களாக கதாபாத்திரங்களின் பெயரை லைக்கா அடுத்தடுத்து வெளியிட்டு ரசிகர்களை கொண்டாட வைத்தது. அதை அடுத்து இன்று வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா ஆரம்பமாகியுள்ளது.
நேரு உள் விளையாட்டு அரங்கில் ரசிகர்களின் கரகோஷத்துடன் இந்த நிகழ்வு தொடங்கி இருக்கிறது. இதில் அனைத்து பிரபலங்களும் கலந்து கொண்ட நிலையில் தலைவர் மாஸ் என்ட்ரி கொடுத்தது சோசியல் மீடியாவை ரணகளம் ஆக்கி வருகிறது.
அந்த புகைப்படள் அனைத்தும் தற்பது ரசிகர்களால் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அதிலும் மஞ்சு வாரியருக்கு ரசிகர்களிடமிருந்து பலத்த வரவேற்பும் கிடைத்துள்ளது. அதைத்தொடர்ந்து தலைவர் என்ன பேசப் போகிறார் என்ற ஆர்வமும் இப்போது அதிகரித்துள்ளது.