வேட்டையாடு விளையாடு 2 படத்தில் இவரா ஹீரோயின்.? அப்போ கமலுக்கு செம்ம ஜாலி தான்.

kamal vs gowtham

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் கமலஹாசன். தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்பவர்கள் ஒரு சிலரே அதில் முதன்மையானவர் உலகநாயகன் கமலஹாசன் ஆவார். இவர் 1960 ஆம் ஆண்டு களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பட வாழ்க்கையை ஆரம்பித்தார்.

தொடர்ந்து அவர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். பாரதிராஜா இயக்கத்தில் 1971ம் ஆண்டு வெளிவந்த 16 வயதினிலே என்ற திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் பல படங்களில் தனது வித்தியாசமான திறமையை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் திரையுலகில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்தார்.

தமிழ் சினிமாவில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த வேட்டையாடு விளையாடு என்ற திரைப்படத்தில் அதிகாரியாக நடித்து தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இப்படம் யாரும் எதிர்பாராத வகையில் மாபெரும் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

anushka
anushka

இப்படத்தின் இரண்டாம் பாகத்தினை ஐசரி கணேஷ் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் ஹீரோயினாக நடிகை அனுஷ்கா அவர்கள்  நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.