தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர்கள் தங்களுடைய திறமையை நிரூபித்து வெற்றியை நிறைவேற்றி வருகிறார்கள் அந்த வகையில் தற்பொழுது இருக்கும் பல இயக்குனர்கள் ரசிகர்களை வெகுவாக கவரும் படி திரைப்படங்களை இயக்கி வருகிறார்கள். இந்த லிஸ்டில் இடம் பிடித்தவர் தான் வெற்றிமாறன் இவர் தமிழ் சினிமாவில் பொல்லாதவன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்
தான் இயக்கிய முதல் திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது அதுமட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் ஆடுகளம், அசுரன் வட சென்னை ஆகிய திரைப்படங்களை இயக்கினார் அது மட்டுமில்லாமல் பல விருதுகளையும் வாங்கிக் குவித்தார்.
இந்தநிலையில் வெற்றிமாறன் குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் ஆண்ட்ரியா கூறிய தகவல் தான் தற்போது சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. அதாவது வெற்றிமாறனுக்கு முதல் திரைப்படம் பொல்லாதவன் கிடையாது என கூறி அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார். காலேஜில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது வெற்றிமாறன் என்னிடம் ஒரு கதையைக் கூறினார் அப்பொழுது படிப்பின் மீது அதிக ஆர்வம் இருந்ததால் நான் அதில் நடிக்க மாட்டேன் என கூறி விட்டேன்.
அதன்பிறகுதான் வெற்றிமாறன் பொல்லாதவன் திரைப்படத்தின் கதையை கையில் எடுத்தார் அந்த திரைப்படத்தில் தனுஷை நடிக்க வைத்தார் படமும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதேபோல் ஆண்ட்ரியா தன்னுடைய படிப்பை முடித்துவிட்டு மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி ஆடுகளம் திரைப்படத்தில் நடிகை டாப்சி அவர்களுக்கு டப்பிங் பேசினார்.
இந்த தகவல் தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.