குறைந்த பட்ஜெட்டில் சிறப்பான படங்களை எடுத்து அசத்தி வருவர் இயக்குனர் வெற்றி மாறன். இதுவரை இவர் இயக்கிய பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி படங்களாகவே இருந்து வந்துள்ளன அதுமட்டுமல்லாமல் தேசிய விருது உட்பட பல்வேறு விருதுகளையும் அள்ளி உள்ளது.
குறிப்பாக இயக்குனர் வெற்றிமாறன் நடிகர் தனுஷ் உடன் கைகோர்த்து நடித்த ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற படங்கள் அனைத்துமே வெற்றி படங்கள் தான். தற்பொழுது தனுசு உடன் கூட்டணி அமைக்காமல் காமெடி நடிகர் சூரியை வைத்து விடுதலை என்னும் படத்தை உருவாக்கி வருகிறார் இந்த படம் மிகப்பெரியது என்பதால் இரண்டு பாகங்களாக எடுக்க திட்டமிட்டுள்ளார்.
முதல் பாகம் காடு மற்றும் மலைகள் சார்ந்த பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தை தொடர்ந்து பல்வேறு படங்கள் வெற்றிமாறன் கையில் இருக்கின்றன. அதன் காரணமாக ஒரு சில டாப் நடிகர்களின் படங்களை நிராகரித்துள்ளாராம்.
நடிகர் சூர்யாவின் வாடிவாசல் படம் 2 வருடம் தள்ளி போய் உள்ளது. தனுஷ் தற்பொழுது வெற்றி மாறன் இணைய அழைப்பு விடுத்துள்ளார் ஆனால் அதை வெற்றிமாறன் நிராகரித்திருக்கிறாராம் மேலும் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் வெற்றிமாறன் இணைய ஆசை தெரிவித்துள்ளார்.
அதையுமே இயக்குனர் வெற்றி மாறன் வேண்டாம் என உதறி உள்ளார். தொடர்ந்தது மூன்று டாப் ஹீரோக்களின் படங்களை ஒதுக்கி வைத்து விட்டு விடுதலை மற்றும் அடுத்தடுத்த படங்களில் வேலை செய்ய வெற்றிமாறன் முனைப்பு காட்டி வருகிறாராம் இருப்பினும் ஜூனியர் என்டிஆர் விடாமல் துரத்தி வருகிறாராம்.
30 கோடி ரூபாய் சம்பளம் தருகிறேன் வாருங்கள் படம் பண்ணலாம் என அழைத்துள்ளார் ஆனால் எதற்கும் மடங்காத வெற்றிமாறன் தான் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருக்கிறேன் முடியாது என மறுத்து விட்டாராம்.