இயக்குனர் வெற்றிமாறன் விரல்விட்டு எண்ணும் அளவிற்கு படங்களை எடுத்திருந்தாலும் அந்த படங்கள் அனைத்துமே பிளாக்பஸ்டர் ஹிட் தான். கடைசியாக இயக்குனர் வெற்றிமாறன் நடிகர் தனுஷை வைத்து அசுரன் என்னும் படத்தை எடுத்து வெற்றி கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது அதனைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றி மாறன்.
சூரி, விஜய் சேதுபதி ஆகியவர்களை வைத்து விடுதலை என்னும் படத்தை எடுத்துள்ளார். இந்த படம் இரண்டு பாகங்களாக இதைவிட உள்ளது முதல் பாகம் வெகு விரைவிலேயே வெளிவரும் என சொல்லப்படுகிறது இந்த படம் முழுக்க முழுக்க போராட்டக்காரர்களுக்கும், போலீசுக்கும் இடையே நடக்கும் பிரச்சனையை எடுத்துரைக்கும் என சொல்லப்படுகிறது.
இந்தப் படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் நடிகர் சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தையும் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் வெற்றிமாறன் குறித்து ஒரு தகவல் ஒன்றை இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. இயக்குனர் வெற்றிமாறனுக்கு தமிழ் சினிமா உலகில் ஒரு நல்ல இமேஜ் இருக்கிறது அதை இப்போ காசுக்காக பயன்படுத்திக் கொள்கிறார்.
அண்மையில் கலையரசன் நடிப்பில் வெளியான பேட்டை காளி படத்தை வெற்றிமாறன் தயாரித்ததாக ஒரு பக்கம் தகவல்கள் வெளிவந்தது ஆனால் உண்மையில் இந்த படத்தை வெற்றியை மாறன் தயாரிக்கவே இல்லையாம்.. படத்தின் பிரமோஷனுக்காக அவரது பெயரை தயாரிப்பாளராக போட்டுக் கொண்டனர்.
இதற்காக அவரும் கிட்டத்தட்ட இரண்டு கோடி வாங்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இப்படி பணத்துக்காக தனது பெயரையே விட்டுக் கொடுத்து இருப்பது திரையுலகில் இருப்பவர்கள் தொடங்கி ரசிகர் வரை பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளதாம். மேலும் வெற்றி மாறனின் பெயர் கொஞ்சம் கொஞ்சமாக டேமேஜ் ஆகியும் தற்போது வருவதாகவும் சொல்லப்படுகிறது.