சைலண்டாக இருந்துகொண்டே தமிழ் சினிமா உலகில் சிறப்பான படங்களை கொடுத்து வருபவர் தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் இவர் தனுஷுடன் கைகோர்த்து இயக்கிய திரைப்படங்கள் அனைத்துமே வெற்றி படங்களாக இருந்து வந்துள்ளன. அந்த வகையில் பொல்லாதவன், ஆடுகளம், அசுரன், வட சென்னை போன்ற படங்கள் வெற்றி பெற்றதோடு..
மட்டுமல்லாமல் பல்வேறு விருதுகளை அள்ளி குவித்ததோடு தேசிய விருது கூட தனுஷ் மற்றும் வெற்றிமாறனுக்கு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் வெற்றிமாறன் நாவல் மற்றும் உண்மை கதைகளை படங்களாக எடுத்து வெற்றியை பெற்று வருகிறார்.
இவர் இப்பொழுது காமெடி நடிகர் சூரி மற்றும் விஜய சேதுபதியை வைத்து விடுதலை என்னும் படத்தை எடுத்து வருகிறார். இறுதிகட்ட படப்பிடிப்புகள் போய்க்கொண்டிருக்கின்றன அதனை தொடர்ந்து முதல் முறையாக சூர்யாவுடன் கை கோர்க்க வாடி வாசல் திரைப் படத்தை எடுக்கிறார் அதன் பிறகு வேண்டுமானால் தனுஷுடன் இணைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த வெற்றிமாறன் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார் அதில் அவர் கூறியது இயக்குனர் ஷங்கர் எப்படி விஜய்யை வைத்து நண்பன் என்னும் படத்தை கொடுத்தாரோ அதே போல 2000ஆண்டு நான் ஒரு படத்தின் கதையை உருவாக்கி விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அவர்களிடம் சொன்னேன்.
அப்போது எனக்கு சரியாக கதை சொல்லத் தெரியவில்லை. அதனால் அந்த வாய்ப்பு அப்படியே போனதாக கூறப்படுகிறது. கதை சொல்லும் பக்குவம் அப்பொழுது வெற்றிமாறனுக்கு இருந்திருந்தால் விஜய்யை வைத்து நண்பன் போன்ற படத்தை 2000 ஆண்டில் எடுத்துக் காட்டி இருப்பார் வெற்றிமாறன்.